பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五盒孕 சிலரே தாங்களே பெண் பார்த்துத் திருமணம்செய்து கொன் w 'ர். விதவைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. சிலர் பூப்பெய்தாத பெண்களையும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருளமொழி பற்றிய கள ஆய்வின் போது (Fielன் இ 鲇 இருளர்களின் திருமணம் பற்றி நேரில் கண்டறிந்தவற்றை யும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாகும். இனவகைகள் இருளர்களிடையே இரண்டு மூன்று மண வகைகள் உள்ளன. மாப்பிள்ளையின் தாய் தந்தையர் பெண்ணை நேரில் பார்த்துப் பெண் வீட்டாரிடம் கேட்டு மணம் முடிப் பது ஒரு மரபு. மற்றொரு மரபு, மாப்பிள்ளை தனக்குப் பிடித்த பூப்பெய்திய பெண்ணோடு திருமணத்திற்கு முன்பு தொடர்பு கொண்டு அவளுடைய வீட்டில் தங்கி வாழ்க்கை நடத்திப் பின் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகும். பெண் வீட்டில் தங்கி வாழ்க்கை நடத்தும் ஆடவனை 'மென மாப்பிள்ளை' என்று இவர்கள் மொழியில் கூறு கிறார்கள். மென மாப்பிள்ளை’ அவளோடு வாழ்க்கை நடத்தும் காலத்தில் தான் ஈட்டும் ஊதியத்தை அவள் வீட்டாருக்குத் தருகிறான். இதைப் பணி செய்து திருமணம் செய்து கொள்ளும் முறை என்று கொள்ளலாம். (Marriage by service), சில சமயங்களில், இவ்வாறு வாழ்க்கை நடத்தும் மெனமாப்பிள்ளை பெண் பிடிக்கவில்லை என்ற காரணத் தால் அவளை விட்டுச் செல்வதும் உண்டு. பெண் பருவம் அடைவதற்கு முன்பே சிலர் திருமணம் செய்து கொள்ளு கிறார்கள். பருவம் அடைந்த பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வைத்திருந்து வாழ்க்கை நடத்திய பின் திருமணம் செய்து கொள்வது ஒரு வகை மரபு. சிலர் தமக்குப் பிடித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடி விடு வதும் உண்டு. இதை உடன் போக்குத் திருமணம் (Marriage by elopement) என்று கொள்ளலாம். ஒரு பெண் ஒரு