பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3 தாம் கொண்டு சென்ற இரும்புத் தடியையும் குடையையும் வைத்துவிட்டு, அன்று இரவு அவர்கள் விருந்தினராக அங்குத் தங்கிவிடுகிறார்கள். காலையில் உணவு உண்டபின், நாங்கள் போய்வருகிறோம்' என்று மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் விடைபெற்றுக் கொள்வர். அப்போது நீங்கள் எப்பொழுதும் வராதவர்கள் வந்திருக்கிறீர்கள் என்ன. காரணம்?' என்று பெண் வீட்டார் கேட்கிறார்கள். உங்க ளிடம் கொஞ்சம் நிலம் வாழைமரம் உள்ளதாம். இந்த நிலத்தை உங்களிடம் கேட்டு வேளாண்மை செய்யலாம் என்று வந்திருக்கிறோம்' என்று மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் கூறுகிறார்கள். நீங்கள் அந்த முள்ளுக்காட்டிை வெட்டமாட்டீர்கள்' என்று பெண் வீட்டுக்காரர்கள் கூறு கிறார்கள். பின்பு வீட்டிலுள்ள அனைவரையும் கேட்டு விட்டு, நீங்கள் அடுத்த முறை வரும்பொழுது பதில் சொல்லுகிறோம்' என்று பெண் வீட்டுக்காரர்கள் கூறு கிறார்கள். இரண்டாவதுமுறை மாப்பிள்ளை வீட்டுக்காரர் கள் பெண் வீட்டிற்குச் செல்லுகிறார்கள். முதல்முறை விருந்து கொடுத்து விருந்தோம்பியது போன்றே இம்முறை யும் விருந்து கொடுக்கிறார்கள், பெண் வீட்டிலுள்ள எல்லா ரிடமும் 'நிலம் வேண்டும்' என்று கேட்கிறார்கள். எங்களி டம் சின்னக்காடுதான் இருக்கிறது; அதை நல்ல முறையில் வேளாண்:ை செய்யவேண்டும்’ ’ என்று பெண்வீட்டுக் காரர்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் நல்லமுறையில் நிலத்தைப் பயிர் செய்கிறோம்' என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். பின்னர், மாப்பிள்ளை வந்து பெண்ணைப் பார்த்துச் சம்மதிக்க வேண்டும். அடுத்த முறை மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க வருகிறார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். பின்னர், இருவரும் அவர்கள் சம்மதத்தைத் தெரிவிக் கின்றனர். பின்பு, மாப்பிள்ளை வீட்டுக்காரர் தங்களுடைய ஜாத் இயுடன் ஏழுபேரைக் கூட்டிக்கொண்டு ப்ோவார்கள்