பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.4. I பெண் வீட்டாரும் தங்களுக்கு ஒரு ஜாத்தியை நியமனம் செய்திருப்பார்கள். இரு ஜாத்திகளும் மற்றவர்களும் எப்போது திருமணம் நடத்தலாம். பெண்ணுக்கு மாப் பிள்ளை வீட்டார் எவ்வளவு பரியப்பணம் கட்ட வேண்டும் என்பன போன்றவற்றைப் பேசி முடிப்பார்கள், பு காலத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் பகியப்பன் மாக ஆறேகால் ரூபாய் அல்லது பத்தேகால் ரூபாய் கட்டி னார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள், இப்பொழுது பெரும்பலோனோர் அறுபதேகர்ல் ரூபாயைப் பெண்ணுக்குப் பரியப்பணமாகக் கட்டுகிறார்கள். பெண்ணுக்கு எவ்வளவு பணம் பரியமாகக் கொடுக்க வேண்டும் என்று ஜாத்திகள் முடிவு செய்கிறார்கள். இதனைக் கடிகட்டுகாரு' என்று இவர்கள் மொழியில் கூறுகிறார்கள். பரியப்பணம் இவ்வளவு என முடிவு செய்யும்போதே, திருமணத் தேதியையும் குறித்து விடுவார்கள். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி கர்ப் பிள்ளைக்கும், பெண் வீட்டு ஜாத்தி பெண்ணுக்கும் பொறுப்பு ஏற்கிறார்கள். 'வருகிற திங்கட்கிழமை கடிகட் டியதற்குச் சரியாக எட்டாம் நாள் திருமணம்' என்று சொல்லி, மாப்பிள்ளை வீட்டுக்காரர் பெண்ணுக்குப் பசியப் பனமாக அறுபதேகால் ரூபாய் கட்டவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். 'வருகிற ஞாயிற்றுக்கிழமை வந்து திங்கட்கிழமை பெண்ணை அழைத்துச் செல்கிறோம்’ என்று கூறிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்றுவிடு கின்றனர். மாப்பிள்ளை வீட்டார் விட்டுக்குச் சென்று வீட்ட்ைச் சுத்தம் செய்து வெள்ளை அடிக்கின்றனர். பின் தங்கள் உறவினர்களையும் மற்ற இருளர்களையும் வெற்றிலை பாக்குக் கொடுத்துத் திருமணத்திற்கு வரும்படி அழைக் கின்றனர். பெண்வீட்டில் ஆலி என்ற ஒருவகை மர்த்தி விருந்து 12 துண்கள் வெட்டிப் பந்தலுக்குக் கால்கள் நாட்டுகிறார்கள். பெண் வீட்டாரும் தம் உறவினரையும், மற்ற இருளர்களையும் திருமணத்திற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அழைக்கின்றனர்.