பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亚德2 ஜாத்திகளும், பெரியோர்களும், உறவினர்களும் குறித்த நாளன்று திருமணத்தை நடத்தும் நிமித்தம் மாப்பிள்ளை வீட்டில் கூடுகிறார்கள். மாப்பிள்ளை வீட்டு ஜாத்திக்கும், அவன் மனைவிக்கும் மாப்பிள்ளை வீட்டில் கோழிக்கறி யுடன் சாப்பாடு போடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்டபின் மாப்பிள்ளையின் தாய் தந்தையர், பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய அணிகலன்களையும், பரியப்பணத்தையும் ஜாத்தி விடம் ஒப்புவிக்கிறார்கள். முதலில் மாப்பிள்ளை வீட்டு ஜாத்தியும் அவன் மனைவியும் அவர்களைப் பின்தொடர்ந்து மாப்பிள்ளையின் பெற்றோர்களும், மற்றவர்களும் மண மகனை அழைத்துக் கொண்டு இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் வீட்டை நோக்கிச் செல்கின்றனர். மணப்பெண் வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் மணப்பெண் திருமண நாளைக்கு முந்திய நாள் காலை யில் குளித்து வனப்புடன் காணப்படுவாள். (பெரும் பாலும் இருளர்கள் தினமும் குளிப்பதில்லை; ஞாயிற்றுக் கிழமைகளில்தான் குளிப்பார்கள். மணப்பெண் வீட்டில் ஏழு செம்புகளில் ஜினிபெரங்கி என்ற ஒருவகை சிறு மிளகா யைத் தண்ணீரில் கலந்து நிரப்பியிருப்பார்கள். அந்தத் தண்ணீர் நிரம்பிய ஏழு செம்புகளையும் பாய் விரித்து அதன் மீது வைத்திருப்பார்கள். இது ஏழு உலகங்களிலும் உள்ள நீரை ஏழு செம்புகளில் வைத்திருப்பதைக் குறிக்கும். மாப் பிள்ளை விட்டார் வந்தவுடன் வீட்டிற்குள்ளே சென்று ஏழு செம்புகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கரெ நீரை ஒவ்வொரு செம்பிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக் குடிப் பார்கள். குடித்துவிட்டு அதன்பக்கத்தில் வைக்கப்பட்டி ருக்கும் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்வார்கள், வெளியே வந்து, மணப்பெண்ணுக்குப் பக்கத்தில் பெண் வீட்டு ஜாத்தியும், மாப்பிள்ளைக்குப் பக்கத்தில் மாப் பிள்ளை வீட்டு ஜாத்தியும் நின்று கொண்டு பின் வருமாறு கூறுவார்கள்,