பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

  • இதி கூடியிருக்க கசபெக்கு ஒரு சரண

ஏழு லோகக்கு ஒரு சரண தந்தை லோகக்கு ஒரு சரண தாய் லோகக்கு ஒரு சரண இவ்வாறு சொல்லிமுடித்த பின் மாப்பிள்ளை வீட்டி லிருந்து வந்தவர்களைப் பெண்வீட்டார் பாய்விரித்து அதில் உட்காரச் சொல்வார்கள். மாப்பிள்ளை வீட்டுப் பாயில் மாப்பிள்ளை ஜாத்தியும், உறவினர்களும் அமர்வர்; பெண் வீட்டுப் பாயில் பெண்வீட்டு ஜாத்தியும் மற்றவர்களும் உட்காருவார்கள். ஆண்கள் தனிப்பாயிலும் பெண்கள் தனிப்பாயிலும் உட்காருவார்கள். பெண் வீட்டார்கள் எல்லாருக்கும் காபி கொடுப்பார்கள். இந்தச் சமயத்தில் சாப்பாடு ஆகிக்கொண்டிருக்கும். பெண் வீட்டில் கோழி அடித்துச் சமையல் செய்வார் கள். சமையல் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டு ஜாத்தியும் அவன் மனைவியும், பெண்வீட்டு ஜாத்தியும் அவன் மனைவி யும் சாப்பிடுவார்கள். மாப்பிள்ளை வீட்டு ஜாத்திக்குப் போடப் பட்டிருக்கும் சாப்பாட்டில் கோழித் தொடையைக் குத்தி வைத்திருப்பார்கள்.பெண்வீட்டு ஜாத்திக்குப் போடப் பட்டிருக்கும் சாப்பாட்டில் கோழித் தலையைக் குத்தி வைத்திருப்பார்கள். இவர்கள் நாலுபேரும் சாப்பிட்ட பின் மற்றவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடுவார்கள். மற்றவர் களுக்கெல்லாம் கோழிக்கறி கிடையாது. பெண் வீட்டிற்கு முன் உள்ள நடு இடத்தில் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி ஒரு பாயிலும், பெண்வீட்டு ஜாத்தி ஒரு பாயிலும் உட்கார்ந்து எல்லார் முன்னிலையிலும் துணிகளையும் அணிகலன்களை யும் மாப்பிள்ளைவீட்டு ஜாத்தி பெண்வீட்டு ஜாத்தியிடம் கொடுப்பான், பெண் வீட்டு ஜாத்தி அதை ஒப்புக்கொண்டு அவை எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வான். பின்பு வெண்கலக்கிண்ணம் எடுத்து நடுவில் வைத்து, பெண்