பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4 வெற்றிலை மாப்பிள்ளை வெற்றிலை என்று வாங்கி அதை ஏழு பாகமாகப் பிரித்து கிண்ணத்தைச் சுற்றிலும் வைப் பார்கள்.இதன் நடுவில் கல்லை வைப்பார்கள். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி அறுபதேகால் ரூபாய் பரியப் பணத்தை ஒரு ரூபாய் நாணயங்களாகக் கல்லில் போட்டு மூன்று தடவை எண்ணிக் கிண்ணத்தில் போட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி எண்ணி முடிக்கும் பொழுது, பின்வரும் பாட்டைப் பாடி மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி, பெண்வீட்டு ஜாத்தி யிடம் கொடுப்பான். மும்போனே பிம்போனே ஒஜி.ஆயி ஒதுகிவத்தெ தவளை ஆயி த.வந்து வந்தெ காடிலதென மாவெ தனத்து வந்தே பெணிலாவனே நெல்லு கரிக்கெ புல்லை வெட்டி பெனிலாவனெ கோட்ட சிங்கெமுள்ளெ வெட்டி பெணிலாவனெ உரி சிங்கெமுள்ளே வெட்டி பெணிலா வனே அங்கயி அகல பூமியை தந்து முங்கவி பாட்டி பெண்ணை தந்து பெணிலாவனே தரந்த கூரை தரந்த சன்னெ கத்தின திப கத்தின சன்னெ அட்ட சோறு பேரின் சன்னெ ஆசின பாய் ஆசின சன்னே வெட்டின கத்தின வெட்டின சன்னே தின சம்பல நனசம்பல ஒண்டோ, சண்டதோ சண்டலெ, சண்டலெ, சண்டலெ, சண்டுட்டது. மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி இந்தப் பாடலைக் கூறி முடிக்கும் தருவாயில் பெண்விட்டு ஜாத்தி சண்டலெ, சண்டலெ, சண்டலெ (என மும்முறை) கூறிவிட்டு, நாலா வது தடவையாகச் சண்டுட்டது (சேர்ந்து விட்டோம்) என்று கூறுவான் அந்த வெண்கலக் கிண்ணமும் பொருள்களும் குடத்தின்மீது வைக்கப்படும். மறுநாள் காலை வரை அந்தப் பொருள்கள் குடத்தின் மீதே இருக்கும். மறுநாள்