பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 45 பெண் ஜாத்தி பெற்றுக்கொண்ட துணிமணிகளையும் அணி கலன்களையும் கொண்டு பெண்ணை அலங்கரிப்பார்கள். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி பெண் வீட்டு ஜாத்தியிடம் பெரியோர் முன்னிலையில் இரண்டேகால் ரூபாயை மெலை படி பணம்’ என்று தருவான். மணப்பெண்ணின் தாய் தன் மகளுக்குப் பால் கொடுத்தற்காகக் கொடுக்கப்படும் பணம் மெலையடிப் பணம் எனப்படும். பெண்ணையும் மாப் பிள்ளையையும் இணையாக உட்கார வைப்பார்கள். சாம்பிராணி வைத்துப் பெண்ணின் தாய்மாமன் ஒரு சீர்செய் கிறான். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி தாலியைத் தன் மனைவி யிடம் கொடுக்கிறான். மாப்பிள்ளை ஜாத்தியின் மனைவி பெண்ணுக்குத் தாலிக் கட்டுகிறாள். தாலியை இவர்கள் "மூண்டகள்ளி' என்று கூறுகிறார்கள். மணமக்கள் கூடி யிருக்கும் எல்லா இருளர்கள் கால்களிலும் விழுத்துவனங்கு கிறார்கள்.இவ்வாறு காலில் விழுந்து வணங்குவதை 'அட விந்துட்டாரு’’ என்று கூறுகிறார்கள். ஜாத்திக்காரன் ஆணுக்கு ஒரு குடையும் பெண்ணுக்கு ஒரு குடையும் தரு கிறான். பெண்ணையும் மாப்பிள்ளையையும் பெண்ணின் தாய்மாமன் வாழ்த்துவான். இந்த நிகழ்ச்சி முடித்தவுடன் பெண்ணும் மாப்பிள்ளையும் புதுத்துணி விரித்துதாய்தந்தை யார் காலில் விழுந்து வணங்கி வாழ்த்தைப் பெறுவார்கள். 'எங்கள் பெண்ணுக்கு தண்ணீர் எடுக்கத் தெரியாமல் இருக்கலாம், விறகு எடுத்துவர மலையில் வழி தெரியாமல் இருக்கலாம், இதெல்லாம் சொல்லிக் கொடுத்து நீங்கள் வழி காட்டியாக இருக்கவேண்டும். இதெல்லாம் தெரியவில்லை என்ற காரணத்திற்காக விரட்டி அடிக்கக் கூடாது' என்று பெண் வீட்டு ஜாத்தி கூறுவாள். இதற்கெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் பெண்ணை நல்ல முறையில் வைத்து வாழ்க்கை நடத்தச் செய்வது என் பொறுப்பு’’ என்று மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி பெண்வீட்டு ஜாத்தி யிடம் உறுதி கொடுப்பான். பெண் வீட்டு ஜாத்தி மீண்டும் ஒருமுறை பெண்ணையும் மாப்பிள்ளையையும் மாப்பிள்ளை A、夺多等一罩夺