பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 46 ஊருக்கு அனுப்புவதற்கு முன் சண்டதோ' என்று கேட் பான். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி சண்டலெ, சண்டலெ, சண்டலெ, என்று மும்முறை கூறிவிட்டு நாலாவது முறை 'சண்டுட்டது' என்று கூறுவான். மணப்பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு பெண் துணையாகவும், மாப்பிள்ளைக்குப் பக்கத்தில் ஒர் ஆண் துணையாகவும் வருவார்கள். இவர் களுடன் உறவினர்களும் ஜாத்திகளும் வருவார்கள்.ஊருக்கு வரும் வழியில் ஆற்றைக் கடக்க வேண்டியதிருந்தால் மண மக்களை ஆற்றைக் கடக்கும் வரை துக்கிச் செல்வார்கள். மாப்பிள்ளை வீடு மாப்பிள்ளைவீட்டிற்கு எல்லாரும் வந்து சேருவார்கள். சேர்ந்தவுடன் பெண் தனது வலது காலை முன்னால் எடுத்து வைத்து மாப்பிள்ளை வீட்டிற்குள் நுழைய வேண் டும். மாப்பிள்ளை வீட்டை அடைந்தவுடன் அங்குச் சாம்பி ராணி போடுவார்கள். மாப்பிள்ளையின் தாய் மாமன், தாய், தந்தை, அண்ணன், அக்கா, அண்ணி மற்ற உறவினர் கன், ஊர் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்துவார்கள். வாழ்த்தி முடிந்தவுடன் எல்லாரும் சாப்பிடுவார்கள். பெண் தன் வீட்டிலிருந்து மடியில் எடுத்து வந்த அரிசியை ஆண் ஜாத்தியின் மனைவியிலுடன் சேர்ந்து சமையல் செய்வாள். பெண் சமைத்த சோற்றை ஒரே இலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் எதிர் எதிரே உட்கார்ந்து சாப்பிடுவார்கள். பெண் ஒரு பிடி சாதத்தை மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை ஒரு பிடி சாதத்தைப் பெண்ணுக்கும் ஊட்டுவார்கள். இதைப்போன்று மாறி மாறிக் கொடுத்துச் சாப்பிடுவார் கள். அன்று மற்ற இருள ஆடவரும் பெண்டிரும் ஆட்டங்கள் ஆடியும், பாட்டுகளைப் பாடியும் இசைக்கருவிகளை இசைத் தும் இரவு வெகுநேரம் வரை மணமக்களை மகிழ்ச்சி வெள் ளத்தில் திளைக்கச் செய்வார்கள். இந்த இசை நிகழ்ச்சி யுடன் திருமண விழா நிறைவுறுகிறது.