பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 7 Reference E. Thurstan: Castes and Tribes of Southern India, Volume II C-J 1909. G. R. Damodaran : Socio-Economic survey of the Niiigiri Tribes, 1962. R. Perialvar : Meterials collected in field work 3. 2 இங்குக் கூடியிருக்கிற சபைக்கு ஒரு சரணம் ஏழு உலகங்களுக்கும் ஒரு சரணம் தந்தை உலகத்திற்கும் ஒரு சரணம் தாய் உலகத்திற்கும் ஒரு சரணம் முன்பு போனேன் பின்பு போனேன் தனியாக ஒதுங்கி வந்தேன் தவளைபோல் தவழ்ந்து வந்தேன் காட்டிலுள்ள தினையை மாவு இடித்து வந்தேன் பெண்ணையுடையவனே நெல்லின் கரிக்கைப் புல்லை வெட்டி வந்தேன் பெண்ணையுடையவனே கோட்ட சிங்கெமுள்ளை வெட்டிப் பெண்ணையுடையவனே உரிச்சிங்கெமுள்ளை வெட்டிப் பெண்ணையுடையவனே உள்ளங்கை அகல நிலத்தைத் தந்து பெண்ணைத் தந்து பெண்ணையுடையவனே திறந்த வீடு திறந்தபடி எரிகிற விளக்கு எரிகிறபடி சமைத்த சோறு சமைத்தபடி விரித்த பாய் விரித்தபடி வெட்டின கத்தி வெட்டினபடி உன் சம்மணமும் என் சம்மணமும் ஒன்றானதோ சேர்ந்ததோ சேரவில்லை, சேரவில்லை, சேரவில்லை ஒன்றாகிச் சேர்ந்து விட்டது.