பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏落盘 ,ே முன்னுரை நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அந்த ஒன்பது இனங்களுள் இருளர் இனமும் ஒன்று. இவர்கள் கோவை மாவட்டத்தில் அட்டப் பாடிமலை, சிறுவாணிமலை, வெள்ளியங்கிரி முதலிய பகுதி களிலும், தென்னார்க்காடு மாவட்டத்தில் செஞ்சிப் பகுதி யிலும் வாழ்வதாகத் தெரிகிறது, இக்கட்டுரையில், குறிப் பாக, நீலகிரி மாவட்டத்தில் வாழும் இருளர்களைப் பற்றி யும், அவர்கள் இசைபற்றியும் பார்ப்போம். நீலகிரி மாவட் டத்தில் குன்னுரர் வட்டத்தில் 33 சிற்றுார்களில் சுமார் 4072 இருளர்கள் வாழ்கிறார்கள்.இந்தச் சிற்றுரர்கள் கடல் மட்டத்திற்கு 4000 அடிக்கு மேல் உள்ள மலைப் பகுதி களிலும், மலைப் பள்ளத்தாக்குகளிலும் உள்ளன. இவர்கள் கறுப்பு நிறமும் நடுத்தர உயரமும் உள்ளவர்கள். இவர் களுக்கு இருளமொழி, படகமொழி, தமிழ்மொழி மூன்றும் தெரியும். 2. இசைப் பாடல்கள் இருளர்கள் தமது மொழியில் மிகச் சில இசைப் பாடல் களையே பாடி மகிழ்வெய்துகின்றனர். இவர்களிடமிருந்து இவர்களுடைய இசைப் பாடல்களை அறிந்து கொள்வது இடர்ப்பாடாகவே உள்ளது. புதியவர்களிடம் தங்களது பாடல்களைப் பாடிக்காட்ட இவர்கள் வெட்கப்படுகிறார் கள். அதனால், நமக்கு இவர்கள் பாடும் எல்லாப் பாடல் களையும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. சில பாடல்களை மட்டுமே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோர் படகர் கள். அதனால்தான், இம் மாவட்டத்தில் வாழும் மற்ற பழங்குடி மக்களும் தமிழர்களும் படகமொழி பேசும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இருளர்கள் விலக் கல்ல. படக மொழியில் மிகுதியான பாடல்கள் உள்ளன. வயது முதிர்ந்த இருளர்கள் படக மொழிப் பாடல்களை அறிந்துள்ளார்கள். நாம் பாடல்களைப் பாடச் சொன்னால்