பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வேலன் வெண்கடுகும், நெய்யும் கலந்த கலவையை உடலின் மீது பூசிக்கொள்கிறான் (நெய்யோடு ஐயவி அப்பி). வெண்கடுகு, பேயை விரட்டும் சக்தியுடையது என்பது நம் பிக்கை. பின்னர், மலபார் வேலன் தாழ்ந்த குரலில் மந்திரம் ஜெபிக்கிறான். அப்படி ஜெபிக்கும்பொழுது கூப்பிய இரு கரங்களின் கட்டை விரல்களும் அவனுடைய இதயத்தை நோக்கி வளைந்திருக்கும். இம்மாதிரி அபிநயிப்பதை ஆத்ம சாட்சி என்று மலபார் வேலன் அழைக்கிறான். இதைப் போன்ற சமிக்ஞையையே திருமுருகாற்றுப்படையில் வரும் வேலன் மந்திரம் ஜெபிக்கும்பொழுது செய்கிறான். குடந் தம்பட்டு’ என்ற சொல் திருமுருகாற்றுபடையில் இதைக் குறிக்கிறது. பாடலின் அடிக்குறிப்பில் இந்தச் சமிக்ஞை மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நான்கு விரல் களும் மூடி இருக்க வேண்டும். அதே சமயம் கட்டை விரல் கள் இரண்டும் நெஞ்சை நோக்கி வளைந்திருக்க வேண்டும். இந்த விவரமும் மலபார் வேலனின் அபிநயமும் ஒத்திருக் கின்றன. அதனால், இவ்விளக்கம் சரியானது என்றே கொள்ளலாம். மலபார் வேலன் களத்தின்மீது வெண் பொரியையும், காப்பரிசியையும் (Puffed rice) தூவுகிறான். திருமுருகாற்றுப்படையில் வெண்பொரி சிதறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. களமமைப்பதைச் சற்று விளக்குவோம். மலபாரில் க ள ம ைம க் க வ ர ைமு மட்டைத் துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வாழை மட்டைத் துண்டுகளைத் தரையில் வைத்துச் சதுரமான வடிவம் அமைக்கிறார்கள். இதில் சம அளவுள்ள பன்னிரெண்டு பிரிவுகள் இருக்கும். இப்படி அமைக்கப்படும் வடிவம் 'களம்’ என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில்தான், வேலன் தான் வேட்கின்ற தெய்வத்திற்கு வேண்டிய பலிப் பொருள்களைத் துரவுகிறான். அக்காலத்தில் களமமைக்க மூங்கில் பயன்பட்டதென்றும், களத்தில் அறுபத்து நான்கு பிரிவுகள் இருந்தனவென்றும் சங்கப் பாடல்களால் அறி கிறோம். சங்கத் தமிழில் இப்பிரிவுகள் பல்பிரப்பு என்று. அழைக்கப்பட்டன. பிற்காலத்து உரையாசிரியர்கள் இதன்