பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 I படகப் பாடல்களையே பாடிக்காட்ட முன் வருகிறார்கள். இளம் தலைமுறையினர் தமிழ் மக்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதால் மிகுதியாகச் சினிமாப் பாடல்களையே அறிந்துள்ளார்கள். பெரும்பாலானவர்கள் இருளமொழிப் பாடல்களை அறிந்துள்ளார்கள். சிறிது படித்த பெண்களுக்கும், வாலிபர் களுக்கும் அவர்களுடைய பாடல்கள் மீது நாட்டமில்லை’ படிக்காதவர்களும், வயதுவந்த பெண்களும், முதியவர். களும் ஆடல் பாடல்களில் நாட்டம் கொண்டுள்ளனர் பெரும்பாலான பாடல்களில் ஒவ்வோர் அடியின் முன்பகுதி யும் மரம், செடி, மலர் இவற்றின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளது. பல பாடல்கள் பாலுணர்வு பற்றியனவாக வும், சில பாடல்கள் செடி, மரம், பறவைகள் பற்றியன வாகவும் உள்ளன. இவர்களுடைய இசைப் பாடல்களில் பேப் பாட்டு”, 'தினைப்பாட்டு' என இரு வகைகள் உள்ளன. அவர்கள் பாடி மகிழும் சில பாடல்களின் வரிகளைக் காண்போம். பாட்டு : . ஆடாடோ நவிலே ஆடிவா நவிலே இச்சிக் கொம்பிலே அறுதடு நவிலே சக்கெ கொம்பிலே அறுதடு நவிலே இப் பாடலின் மற்ற வரிகளில் முதல் பகுதியில் வரும் மரப் பெயர் மட்டும் மாறி வரும். மற்றபடி ஒன்றும் மாறுவ தில்லை. - பாடலின் பொருள் ஆடு மயிலே ஆடிவா மயிலே, இச்சிக் கொம்பிலே ஆடுகின்ற மயிலே, புலாக் கொம்பிலே ஆடுகின்ற மயிலே, ஆடிவா! நவில்=மயில், சக்கெ=பலா,