பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 இதன் இரண்டு பக்கங்களும் கடமான் தோலால் மூடப்பட் டுள்ளன. இந்த இசைக் கருவியைத் திருமணம், சாவு, மற்ற விழாக்களில் பயன்படுத்துகிறார்கள். இந்த இசைக்கருவியை வாங்குகிறார்கள். மான்தோல் குறைந்த சத்தம் உண் டாக்கக் கூடியது. 3.1.3. தம்பட்டெ. இரும்பு வளையத்தில் ஒருபக்கம் மட்டும் வெள்ளாட்டுத்தோலால் போர்த்தப் பட்டுள்ளது. இது அதிக சத்தம் உண்டாக்கவல்லது. இந்தத் தோல் மெல்லியதாக இருக்கும். மான்தோலும் வெள்ளாட்டுத்தோலும் இவர்களுக்குக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு இந்த இசைக் கருவி களைச் செய்கிறார்கள், இரும்புச் சாமான்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இந்த இசைக்கருவிகளை இசைப் பதற்கு முன் தியில் வாட்டுகிறார்கள். தீயில் வாட்டினால் அதிக சத்தம் உண்டாகிறது. 3.2. துளைக் கருவிகள் 3.2.1 . பு:கிரி. இந்தத் துளைக் கருவி சிறு மூங்கில் என்னும் ஒருவகை மூங்கிலால் செய்யப்பட்டது. இது ஒர் நீண்ட உருண்டையான 2; அல்லது 3 அடி நீளமும் த் அல்லது அங்குல விட்டமும் உள்ள ஒரு மூங்கில் குழல். இந்தக் குழலின் பக்கவாட்டில் ஆறு துளைகள் இடப்பட்டு உள்ளன. வாயால் ஊதும் பக்கத்திலுள்ள ஒட்டை குவிந் துள்ளது. மலைப்பகுதியிலுள்ள மூங்கிலை வெட்டி இந்தக் கருவியைச் செய்கிறார்கள். புகிரியை வாயால் ஊதி இசை எழுப்புகிறார்கள். இந்த இசைக் கருவியை வாசித்துப் பழக்க மில்லாதவர்களால் இதை இசைக்க முடிவதில்லை. இதிலி ருந்து ஒரு புதுவிதமான இசை கிடைக்கிறது. வாய்ப் பாட்டை இந்தப் பு:கிரி வழியாக வாசிக்கிறார்கள். 3.2.2. கனகசுர. பேய்ச்சுரைக்காய் என்னும் ஒருவகை சுரைக்காயினால் இந்தத் துளைக்கருவியைச் செய்கிறார்கள். நெற்றான பேய்ச்சுரைக்காயின் கூட்டை எடுத்து, அதன்