பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலகிரி கசவா பழங்குடி மக்கள் வே. சிதம்பரநாதபிள்ளை எம். ஏ. கீலகிரி மாவட்டத்தில் கசவா எனும் இப்பழங்குடி மக்கள் கூடலூர் பகுதியிலுள்ள ஆனைக்கட்டி, வாழ்ைத் தோட்டம், சிறுார், மாயார், தெங்கு மாரோடா, அள்ளி மாறு, மாவனல்லா, அரக்கோடு, கெர்க்கோலா, ஆசுனுாறு. திம்பா, புளிஞ்சோறு, குண்டத்திபட்டி, கதரப்பட்டி, அத்ரப் பட்டி, இதியனப்பட்டி, உதகரைப்பட்டி, ஜகாலிகதவு, கத்தனப்பள்ளி, அரைக்கடவுப்பட்டி முதலியவிடங்களில் வாழ்கின்றனர். 1961 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இவர் களது மக்கள் தொகை சுமார் நானுாறு ஆகும். இவர்கள் தடித்த உதடும் கூர்மையான கண்ணும் சுருண்ட மயிரும் கறுப்பு நிறமுமுடையவர்கள். ஆண்களோடு ஒப்பிடுமிடத்துப் பெண்களது முகம் வட்ட வடிவமாகவும், மூக்குப் பந்து போன்றும் உள்ளன. கறுப்பாக இருப்பினும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கின்றனர். ஆண்கள் நம்மைப்போன்று வேஷ்டியும் சட்டையும் அணிகிறார்கள். சில வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பெண்கள், தங்கள் இடுப்பின் கீழ் தனி யான சிறிய துணியையும், இடுப்பின் மேல் வேறு சிறிய துணியையும் அணிந்து இருந்தார்கள். ஆனால் இன்றைய பெண்கள், கிராமப்புற மக்கள் உடை அணிவதைப்போன்று அணிகிறார்கள். பெண்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவைகளில் செய்த ஆபரணங்களை அணிகிறார்கள். இவர்கள் மைசூரில் இருந்து வரவில்லை என்று சொன்னா லுங்கூட, இவர்களது ஆபரணங்களை வைத்து, இவர்கள் மைசூரிலிருந்து வந்தவர்கள் என, பிலோ இருதயநாத் அவர் கள் தமது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சிலர் தங்களை இருளர்கள் என்றே கூறிக்கொள்கிறார்கள். சிலர் தங்கட்கும் இருளர்கட்கும் தொடர்பில்லை என்றும்