பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 7 கூறுகிறார்கள். எனவே, இது பற்றி இனவியலாளர்களும் (Ethnologists) உருவத் தோற்ற மானிடவியலாளர்களும் (Physical Anthropologists) @ouffāorg 2-Lowootpril 1,3733 அமைப்பு (Blood groups) முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆந்திரர்கள், இவர்களை ஏனாதி யர்கள் என அழைக்கிறார்கள். இருளர்களுக்கும், ஆந்திராவி லுள்ள ஏனாதியர்கட்கும் செஞ்சுக்களுக்கும் உருவ அமைப்பில் ஒற்றுமை உண்டு என்ற உருவத்தோற்ற மானிட வியலார் கருத்து இவண் குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் தங்களது குடிசைகளை அஞ்சுப்புல் என்ற புல்லினால் அரைவட்டவடிவமாக வேய்ந்து இருக்கிறார்கள். குடிசையினைச் சேரி எனக் குறிப்பிடுகிறார்கள். மண்சுவர் களுக்குப் பதிலாகக் குட்டையான மூங்கிலையும் ஏனைய காட்டுக் கம்புகளையும் நட்டு இருக்கிறார்கள். சிலரது வீடு கள் பல அறைகளைக் கொண்டதாக உள்ளன. தட்டி வைத்துப் பல அறைகளாகப் பிரித்துள்ளனர். வீட்டைச் சுற்றிலும் வாழை, மற்றும் சில காய்கறிச் செடிகளையும் பயிரிடுகிறார்கள். சேரியின் முன்பக்கத்தில் மாடு, கன்று களைக் கட்டி வைத்துள்ளனர். இது நாகாலாந்திலுள்ள நாகா பழங்குடி மக்கள் வீட்டிற்கு முன்பு பன்றிகளை அடைத்து இருப்பது போன்று உள்ளது. ஒவ்வொரு சேரி யிலும் தாம்பாளம், கும்பா, தவலை, உரல், உலக்கை, தொட்டி, அகப்பை, குந்தாணி, அகப்பைச் செருகி, செம்பு, கெண்டி, பானை, குடம், சட்டி, உறி, விளக்குமாறு, பாக்கு வெட்டி முதலியவைகளைக் காணலாம். இவற்றைத் தவிர அழுக்குப்படிந்த கோணிகளையும், (Bags) சிறிய மரக் கட்டைகளையும், மூங்கில் குழாய்களையும் காணலாம். சிலர் இச் சிறிய மரக்கட்டைகளைத் தலையணையாக உப யோகிக்கிறார்கள். மேலும் மண்வெட்டி, அரிவாள், பிக்காக கயிறு முதலியவற்றையும் காணலாம். சிலர் வண்டியும் வைத்து இருக்கிறார்கள்.