பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இவர்கள் காட்டுப் பொருட்களைச் சேகரிக்கின்றனர். சிலர் தேன் சேகரிக்கின்றனர். சில ஆண்களும் பெண்களும் எஸ்டேட்டுகளில் வேலை செய்கிறார்கள், காட்டில் கன்று காளைகளை மேய்க்கச் செல்லும் போது, கழுத்தில் அனு மதிச் சீட்டு (Licence), பீடி, வெற்றிலை முதலியவை அடங்கிய மூங்கில் குழாயினைத் தொங்கவிட்டிருப்பர், காட்டு மிருகங்களால் ஆபத்து ஏற்பட்டு இறக்க நேர்ந்தால். தான் யார் என்பதைப் பிறர் அறிந்து கொள்வதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். சிலர் கேப்பை பயிர் செய்கிறார் கள். இரவு நேரங்களில் காட்டு மிருகங்களால் பயிர் அழிந்து விடாதபடி பாதுகாக்க, மரத்தின் மீது உயர்ந்த மாடங்கள் கட்டி, அதன் மீதிலிருந்து தகரத்தை அடித்து, ஒலி எழுப்பி யும் கூக்குரலிட்டுக் கொண்டும் இருப்பார்கள். கேரளத்தி லுள்ள ஊராளிப் பழங்குடிமக்களும், காட்டு மிருகத்தி னின்றும் தங்களைப் பாதுகாக்க மாடங்கள் அமைத்தே தங்கியுள்ளனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். மிகச் சிலரே சொந்த நிலம் வைத்துள்ளனர். இப்பழங்குடி மக்களும் காட்டு நாயக்கர்களும் பெரும்பாலும் காய்கறியே பயிரிடுகிறார்கள். பெட்டக்குறும்பர்களும், பளியர்களும், குறும்பர்களும், காட்டுக்குறும்பர்களும், இருளர்களும், கசவர்களும் பெரும்பாலும் கூலிவேலை செய்தே பிழைக் கின்றனர். எனவே, இவர்களது வருமானம் எவ்வளவு என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. கைத்தொழிலை போதிக்க இவ்வாதிவாசிகளுக்குக் கைத்தொழிற் கூடங்கள் அமைக்கப்பட்டு உபகாரச் சம்பளமும் அளிக்கப்படுகிறது. ஒரு கசவரது வருட வருமானம் ரூ. 572 என்று சமுதாயபொருளாதாரப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. குழந்தைகள் (15 வயதிற்குக் குறைவான வயதை உடையவர்கள்) வேலை செய்யும் விகிதாச்சாரத்தை மாநில அளவில் நோக்கும் போது பளியர், கசவர், முள்ளுக்குறும்பர் ஆகியோரின் குழந்தைகளே அதிகமாக வேலை செய்கிறார் கள். இதனை நோக்கும்போது, இவ்வாதிவாசிகளின் பொரு