பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 0 நீரில் கலக்கப்பட்ட மஞ்சள் நீரோடு, சீயக்காய் கலந்த நீரையும் கலந்து தெய்வத்தைக் குளிப்பாட்டுகிறார்கள். பின் மாலைகளை அணிவித்துப் பால், பழம், தேன் இவற் றைப் படைக்கிறார்கள், பிறகு, தீபாராதனை நடக்கும். இத் தீபாராதனையை நடத்துபவர் லிங்காயத்து வகுப்பைச் சார்ந்த பிராமணர் ஆவர். இதனை அடுத்துப் பல காரணங் களுக்காகத் தெய்வத்தை வேண்டி நேர்ச்சை நேர்ந்தவர் கள் மேளதாளங்களுடன் ஆற்றிற்குச் சென்று நீராடி, வரும் வழியில் செவ்வகவடிவில் உள்ள அனற் குழியில் இறங்கித் தங்கள் நேர்ச்சையை (நேர்த்திக் கடனை) திறைவேற்றுவர். இதற்கு, 'கொண்டமிதி' என்று பெயர். அதன்பின் இவ்வாதிவாசிகளால் நியமிக்கப்பட்ட பூசாரி தீபாராதனை செய்வார். திருவிழா அன்று மொத்தம் நூற் றொன்று தீபாராதனைகள் நடக்கும். கடாக்களை வெட்டி தெய்வத்திற்குப் பவியிட்டு விருந்து பரிமாறப்படும். பின் தடைபெறும் நடனத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆடுவார்கள். வருடத்திற்கு மூன்று தடவைகள் பூஜை நடத்தப்படும். மார்ச்சு மாதந்தான் இவர்களுடைய வருடப்பிறப்பாகும். வருடப் பிறப்பு அன்று நடக்கும் பூஜைக்கு உகாதிப் பூஜை' என்று பெயர். அக்டோபர் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படும் பூஜை களுக்கு முறையே கெளரி பூஜை', 'கார்த்திகைப் பூஜை' என்று பெயர். பொங்கலன்று நான்கு பானைகளை நான்கு திசை களில் வைத்து நடுவில் ஒரு பெரிய பானையையும் வைத்துப் பொங்கலிடுவார்கள். இவர்கள் தீபாவளியைக் கொண்டாடு வது கிடையாது. அம்மை நோய் வந்தவர்களைத் தனி வீட்டில் தங்கும் படி செய்வர். அம்மை நோய் வந்தவர்கள் இறக்க மாட் டார்கள் என்றும், அதற்குக் காரணம் தெய்வத்தின் கருணை எப்போதும் உண்டு என்றும் நம்பிக்கை கொண்டி