பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i (; ; ருக்கிறார்கள். குணம் அடைந்தபிறகு தேய்வத்திற்குப் பால் பொங்கல் படைப்பர். கசவப்பெண்ணை பருவமடைந்தவுடன் தனி வீட்டில் வைக்கின்றனர். அவ்வீட்டின் முன்பு பந்தல் போடப்படும். வீட்டு வாசலில், பேய் பிசாசுகள் வராமலிருக்க இரும்புத் துண்டையும் செருப்பையும் கட்டி தொங்கவிடுவர். இப் பெண், வைக்கோல் விரிக்கப்பட்ட படுக்கையில்தான் தூங்க வேண்டும், இரவில் இவளுக்குத் துணையாக வயதான பெண்ணொருத்தி இவளுடன் தூங்குவாள். தினமும் குளித்தபிறகே உணவு கொடுக்கப்படும். பன்னிரண்டாவது நாளன்று, தாப் மாமன் பொழுது விடிவதற்குமுன் இவள் தங்கியிருந்த விட்டின் முன்பாகத்தில் உள்ள பத்தலை அழித்து விடுவான். பின் அப்பெண் குளித்துவிட்டுப் புத்தம் புதிய ஆடையணிந்து வீட்டு வாசலின் முன்பு வந்து பெர் யோர்களை வணங்கி வீட்டினுள் செல்வாள், அன்று விருந்தும் நடனமும் நடைபெறும், - ஒரு காலத்தில் இவர்களிடையே குழந்தைத் திரு மனம் (Child marriage) இருந்ததாக அறிகிறோம். பெற் றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமே பெரும் பாலும் நடைபெறுகிறது. பையன் வீட்டாரே பெண் பார்க்கச் செல்ல வேண்டும், ஞாயிற்றுக் கிழமையன்று பெண் பார்க்கச் செல்லுகிறார்கள். மாப்பிள்ளையின் உறவினர்களில் ஐந்து பெரியவர்கள் செல்வார்கள். சோற் றுடன் சர்க்கரை கலந்த கலவையில் ஐந்து உருண்டை களோடு பழம், வெற்றிலை முதலியவற்றை எடுத்துக் கொண்டு மேளதாளங்களோடு செல்வர். பின் பெண்ணின் தந்தையிடம் திருமணத்தைப் பற்றிப் (சீதனம் முதலியவை கள்) பேசி முடிப்பர். அதன் பிறகு விருந்து நடைபெதும். திருமணத்தைப்பற்றித் தன் உறவினர்களுக்கு ஆள்மூலம் செய்தி அனுப்புவர். 為 莎2器...」。