பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置份2 குறிப்பிட்ட நாளில் மாப்பிள்ளை வீட்டார், தங்கள் உறவினர்களையும் வேண்டியவர்களையும் அழைத்துக் கொண்டு பெண்ணுக்குரிய சேலை, ரவிக்கை, பரிசப்பணம் (தங்கள் வசதிக்கு ஏற்றவாறு) முதலியவற்றை எடுத்துக் கொண்டு மேளதாளங்களுடன் மணப்பெண் வீடுவந்து சேருவர். மணப்பெண்ணின் வீட்டின் முன்பு துணியாலான பந்தல் போடப்பட்டுத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்த புதுச் சேலையையும் ரவிக்கையையும் மணப்பெண் அணிந்து கொள்வாள். பெண்ணிற்குரிய சில சடங்குகளும் மாப் பிள்ளைக்குரிய சில சடங்குகளும் நடந்த பிறகு, வந்த உறவினர்கட்கு விருந்தளிக்கப்படும். பின் நடனம் நடை பெறும். மாலையில் மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வருவர். பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனித்தனி வீட்டில் தங்கச் செய்வர். மறுநாள் அதிகாலையில் ஐந்து சிறு குடங்களில் ஆற்றிலிருந்து நீரை மொண்டுவந்து சூடாக்கி வெந்நீரில் மாப்பிள்ளையை முதலில் குளிக்கச் செய்வர். இதே போன்று மணப்பெண்ணையும் குளிக்கச் செய்வர். தம்பதிகளாகப் போகும் இவர்கள், புத்தாடை களை அணிந்து கொள்வர். வீட்டின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தில் ஐந்து அடி நீளமுள்ள ஒரு பலகை வைக்கப்பட்டிருக்கும். இப் பலகைக்கு அசமணிப் பலகை என்று பெயர். இப் பலகை யின் ஒரு பக்கத்தில் மஞ்சள் பொடி கலந்த அரிசியுள்ள தட்டையும், மறுபக்கத்தில் கரிப்பொடி கலந்த அரிசியுள்ள தட்டையும் வைப்பர். இவை இரண்டிற்கும் இடையே உள்ள இடத்தில் பழம், பலசரக்கு (உப்பைத் தவிரர்ச் சாமான்கள் முதலியவற்றை வைப்பர். பின் மாப்பிள்ளை யைப் பலகையின் முன், வடக்குத்திசையை நோக்கி நிற்கும் படி செய்து, நான்கைந்து பேர் ஒரு துணியினை மாப் பிள்ளையைச் சுற்றிப் பிடித்துக் கொள்வர். மணப்பெண், மாப்பிள்ளையைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து எதிரே வந்து நிற்பாள். இந்நிலையிலும் பெண்ணுக்கும் மாப்