பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑等3 பிள்ளைக்குமிடையே துணி கட்டப்பட்டிருக்கும். பின், மாலை போல் முடிந்து வைத்திருக்கும் கண்ணாடி மணி களைக் கொண்ட (வசதி உடையவர்கள், தங்கத்தால் மங்கலநாண் செய்கிறார்கள்) தாவியினை மணப் பெண் னின் கழுத்தில் மணமகன் கட்டுவான். பெண்ணை மாப்பிள்ளையின் இடப்பக்கத்தில் நிற்கச் செய்வர். மர்ப் பிள்ளையும், மணப்பெண்ணும் பெரியோர்களின் கால் களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவார்கள், பிறகு, விருந்தும் நடனமும் நடைபெறும். திருமணம் முடிந்தபிறகு, பெண்ணின் வீட்டில் தம்பதிகளுக்கு மூன்று நாள்கள் விருந்து நடைபெறும். பெண்ணின் வீடு அருகில் இருந் தால், தினமும் உணவு அருந்திவிட்டு வந்துவிட வேண் டும். அதிக தூரத்தில் இருந்தால் மூன்று நாள்கள் தங்கி யிருந்து விருந்து முடித்துவிட்டு வந்துவிட வேண்டும். சனிக்கிழமையைத் தவிர ஏனைய நாட்களை நல்ல நாட்களாககக் கருதுகிறார்கள். இருந்தபோதிலும். ஞாயிற்றுக் கிழமையைத்தான் தாவிகட்டும் நாளுக்கு முந்திய சிறந்த நாளாகக் கருதுகிறார்கள். பெண் வீட்டில் நடை பெறும் வைபவத்தன்றும் மாப்பிள்ளையின் வீட்டில் தடை பெறும் வைபவத்தன்றும் மாப்பிள்ளை தன் தாய் மாமனுக்கும் அவர் மனைவிக்கும் தனித்தனியே ஆடைகளும் ஒன்றரை ரூபாயும் கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு இருவரிடையே தொடர்பு ஏற்பட்டு, கர்ப்பம் உண்டாயின், அதற்குக் காரணமான வனே அப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டு மெனப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறுகிறார்கள். பிற இனத்திலுள்ளவர்களைத் திருமணம் செய்துகொண்டால் தம்மீனத்திலிருந்து நீக்கிவிடுவர். தம்மினத்தோடு சேர்க்க வேண்டுமென்றால் ஆண்களுக்குப் பஞ்சாயத்தார் குறிப்பின் படி, குறிப்பிட்ட அடியும் உதையும் கொடுத்து அபராதம் விதிப்பர். பின், ஆண் பெண் இருவரும் பூசாரியால் மந்திரம் ஒதப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டுத் தம்மினத்தாரோடு