பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星等会 சேர்த்துக் கொள்ளப்படுவர். இருபத்து மூன்று வயதிற்கு மேலான மணமாகாத பெண்களை இவர்களிடையே காண முடியாது. ஆனால், ஆண்களுக்கு இருபத்து மூன்று வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கும். விதவை மறுமணம் இவ்வினத்தாரிடையேயும் உண்டு. ஒரு பெண்ணின் கணவன் இறந்தால், இறந்தவனின் அண்ணன்மார்களுக்கு விருப்பம் இருந்தால் விதவையான அவளை மறுமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. ஆனால், இறந்தவனின் தம்பி மார்கள் விதவையான அண்ணியைத் திருமணஞ் செய்து கொள்ளக் கூடாது. அவளைத் தம் தாயாருக்கு ஒப்பாகவே மதிக்கிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மறுமணம், செய்து கொள்ளலாம். விதவையும் பொட்டு வைத்துக் கொள்ளலாம். விவாகரத்தும் இவ்வாதிவாசிகளிடையே அனுமதிக்கப்படுகிறது. கருவுற்ற பெண்ணை ஏழாவது மாதத்திலேயே அவளது பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தாயையும் குழந்தையையும் வேறு வீட்டில் தனியாகத் தங்கும்படி செய்வர்; அல்லது வீட்டோடு சேர்ந்து இருக்கும் தனியறையில் தங்கும்படி செய்வர். இவர்கள் இருக்கும் இடத்திற்குப் பெண்ணின் வீட்டில் உள்ளவர்களோ, மாப்பிள்ளையின் வீட்டிலுள்ளவர்களோ செல்லக்கூடாது. வெளியே நின்று கொண்டுதான், தாயையும் குழந்தையையும் பார்க்க வேண்டும். ஆண்குழந்தை பிறந் தால் ஆறாவது நாளிலும், பெண்குழந்தை பிறந்தால் மூன்றாவது நாளிலும், தொட்டிலில் படுக்க வைப்பார்கள். ஊர்ப் பூசாரியே தன் விருப்பம் போல் குழந்தைக்குப் பெயரிடுவார். பெயரிடும் அன்று, உறவினர்களுக்கும் தம் முடன் வந்தவர்களுக்கும் விருந்து கொடுக்கப்படும். ஒரு மாதம் கழித்துத் தாய் குழந்தையுடன் தன் கணவன் வீட்டிற்கு வருவாள். இரண்டாவதாகவும் அதற்குப் பின்னும் பிறக்கும் குழந்தைகளுக்கும், பெண் வீட்டார் வசதி உடையவராயின் அழைத்துச் செல்வர். ஆனால், கட்டாயம் கிடையாது.