பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰意墨 பெரும்பாலும் நோயினால் இவர்கள் இறப்பது கிடையாதாம். காட்டு மிருகங்களால்தான், இவர்களுக்குச் சாவு ஏற்படுகிறதாம். ஆனால், பிரசவ சமயத்தில் சில பெண் கள் இறக்க நேரிடுகிறதாம். இறந்தவுடன் இறந்தவரின் கால்களை உடனே மடக்கி விடுகிறார்கள். இறந்த செய்தியினைத் தம் உறவினர்களுக்கும், பஞ்சாயத்திற்கும் ஆள் மூலம் தெரிவித்து விடுகிறார்கள். பின், பிணத்தைப் பாடையில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். எடுத்துச் செல்லும்போது உறவினரும் ஊராரும் உடன்வருவர். பின், பிணத்தைச் சவக்குழியினுள் வைத்து உறவினர்கள் குழியைச் சுற்றி வலம் வருகிறார்கள். இறந்தவரின் முத்த மகனாவது அல்லது உறவினர்களின் ஆண்களில் மூத்தவ ராவது பிணத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வார். பின், பிணத்தை மூடி, நரி போன்ற காட்டு மிருகங்கள் தோண்டாமலிருக்க அதன்மீது மிகப் பெரிய பாறாங்கல்லை வைத்து விடுகிறார்கள். இக்கல்லிற்கு 'கோட்டைக்கல்' என்று பெயர், பின்பு விருந்து நடை பெறுகிறது. மூன்றாவது நாளன்று, பிணத்தைப் புதைத்த இடத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெற்றிலை பழம் முதலியவற்றைப் படைக்கின்றனர். இப் பழங்குடி மக்கட்கு, விவசாயம் செய்வதற்கு வேண் டிய நிலங்களும் பண வசதியும் அளித்து விவசாயத் துறை யில் முன்னேற்றுவிப்பதும், காட்டு இலாக்காக்களில் அதிக வேலை வாய்ப்பு அளிப்பதும், காலணிகளைக் கட்டிக் கொடுப்பதும் அரசினரின் கடமையாகும்.