பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கொடவர் வாழ்க்கை முறை இரா. பாலகிருஷ்ணன் M. A. (கொடவர் வாழ்க்கைமுறை என்னும் இந்தக் கட்டுரை இனக்குழு மக்களல்லாதவர்களின் மிக முன்னேறிய பண்பாட்டையும், சுற்றிலும் உள்ள முன்னேறிய பண்பாட்டையுடைவர்காளாடு பல தொடர்புகளையும் உடையவர்களது வாழ்க்கை முறை பற்றிய ஆராய்ச்சியாகும். இது சமுதாய ம்ானிடவியல் ஆராய்ச்சியாக உள்ளது. இவர்களது பண்பாடு சுற்றிலும் உள்ள மக்களது பண்பாட் டோடு வரலாற்று ரீதியாக இணைந்து வருகிறது. இவர்களது நாட்டுப்பாடல்களில் இவர்களது ஆர். வங்களையும், நல்வாழ்க்கை விருப்பையும். பிறரோடு கொண்டுள்ள தொடர்புகளின் தன்மை களையும் காணலாம் அவற்றைச் சேகரித்து வெளி யிட்டால், கன்னட, தமிழ், மலையாள நாட்டுப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆராயலாம். -பதிப்பாசிரியர்) மைசூர் மாநிலத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. குடகு (Coorg) என்னும் சிறு மாவட்டம். 1594 சதுர மைல்களே கொண்ட இச்சிறு மாவட்டம் 1956-ல் மைசூர் மாநிலத்தோடு சேருவதற்கு முன்னால் ஒரு சிறு மாநில மாக இருந்தது. இது ஏலக்காய், ஆரஞ்சு, காப்பி, தேன் ஆகியவை ஏராளமாகக் கிடைக்சுக்கூடிய பகுதியாகும். கடல்மட்டத்திலிருந்து 400 அடி உயரமுடைய காடு களடர்ந்த மலைப்பிரதேசமாகும். அதோடு தமிழ்நாட்டிற்கு உயிர் அளிக்கும் காவிரியாற்றின் பிறப்பிடமாகவும் அமைத் துள்ளது. இவ்வாறு செறிந்த காடும், வளமான மலைகளும் கொண்ட குடகு மாவட்டத்தின் பெருங்குடி மக்கள் கொட வர் (Coorgees)களாக இருந்தபோதிலும் மற்றும் கெளடர்,