பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 67 அய்ரி, முகமதியர், லிங்யாட், பிராமணர், கொலயா, பொலயா, மேதை, எரவா, குருபா, பாலர் போன்ற பல் வேறு இனத்தினரும் வாழ்கின்றனர். தம் இனத்தை மட்டு மன்றி அயலாரையும் போற்றி, ஆதரிக்கும் மனப்பக்குவ முள்ள கொடவர்களது வாழ்க்கைமுறை மற்றவர்களி னின்று மாறுபட்டிருப்பது மிகவும் வியப்பிற்குரியதாக வுள்ளது. 'படைக்குப் பிந்து பந்திக்கு முந்து" என்பது தமிழ்ப் பழமொழி. ஆனால், படைக்கு முந்துவதே கொட வர்களின் குணம். சுதந்தர இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி திரு. K. M. கரியப்பா அவர்கள் இக் கொடவர் குலத்தில் பிறந்தவராவார். நூற்றுக்கு ஜம்பதுபேர் போரையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனால் வீரத்தின் பரம்பரை எனப் போற்றுகின்றனர் பல்வேறறிஞர் கள். இவ்வாறு வீரத்தாலும் தம் விவேகத்தாலும் வேறு பட்டு நிற்கும் கொடவப் பெருங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளைப்பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின்நோக்கம், 'மங்கலம் என்ப மனைமாட்சி'- என்றார் வள்ளுவர். கொடவப் பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்வில் தடக்கும் நற்காரியங்கள் அனைத்தையும் மங்கல என்றே அழைக்கின் றனர். கொடவர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்புவரை நடக்கும் வாழ்க்கை வழிமுறைகளை ஈண்டு நோக்குவோம். 1. பிறப்பு கொடவர் குடும்பத்தில் குழந்தை பிறக்கும் நிகழ்ச்சி அனைவராலும் எதிர்நோக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தாக அமைந்துள்ளது. ஆண்குழந்தை பிறந்து விட்டால் ஆண்மைக்கு அடையாளமாகத் துப்பாக்கி ஒலி எழுப்பி அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பெண் குழந்தையாயின் இனிமைக்கும் பெருமைக்கும் மென்மைக் கும் அடையாளமாகக் கிண்கிணி மணியோசை எழுப்பப் படும். கொடவர்களின் கொள்கைப்படி பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் சர்க்கரையும், வெண்ணெய்யும், நல்ல மிளகும் கலந்து, எதிர்காலத்தில் சர்க்கரைப்போல் இனிமையும்