பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 & வெண்னெப்போல் இளகிய மனமும், நல்லமிளகுபோல் சுறுசுறுப்பும் பெற்று வாழவேண்டுமெனக் கூறிக்கொண்டே கொடுப்பர். அக் குழந்தையை மென்மையான வாழை இலையின்மீதே கிடத்தி வைப்பார்கள். குழந்தை பிறந்த வீட்டார் பன்னிரண்டு நாள்கள் பிறப்புத் தீட்டைக் கடைப் பிடிக்கவேண்டும். அவ்வேளைகளில் எவ்வித விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் இருக்கவேண்டும். 12-வது நாள் குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா நடைபெறும். இவ்விழா விற்கு நெருங்கிய உறவினர் அனைவரையும் அழைப்பார்கள். அன்றுதான் குழந்தையை முதன்முதலாகத் தொட்டிலில் கிடத்துவார்கள். குழந்தையைத் தொட்டிலில் இடுவதற்கு முன்னர் ஒத்திகை நடைபெறும். அதாவது ஓர் அடி நீள முள்ள கல்லை எடுத்து அங்கு வந்திருக்கும் சுமங்கலி ஒருத்தி தொட்டிலில் இட்டு இக்கல்போல் நெடுநாள் வாழ்க’ என வாழ்த்துவாள். அதன்பின்னர்தான், குழந்தையைத் தொட் டிலில் இடுவார்கள். அப்பொழுது அக்குழந்தைக்குத் தங்கக் கரண்டியில் வைக்கப்பட்டிருக்கும் இனிப்புப் பொருளைச் சிறிது கொடுத்து, தொட்டிலில் இட்டவுடன் பெரியோர் களால் சூட்டப்பட்ட பெயரால் அழைத்து, தொட்டில் பாட்டுப்பாடுவார்கள். குழந்தையைப் பெற்றவள் அறுபது நாள்கள் தீட்டுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந் நாட்களில் அவள் அனைத்து அணிகலன்களையும் கழற்றி விடவேண்டும். அறுபது நாட்களும் வெந்நீரிலேயே குளித்து வந்த அவள் அறுபதாவது நாள் குளிர்ந்த நீரில் குளிப்பாள். இவ்வளவுநாளும் வெந்நீரேயிருந்த அலுமினியப்பாத்திரத் தில் குளிர்ந்த நீரை விடுகின்ற நேரத்தில், இப்பானைபோல் தாயின்வயிறும் குளிர்ச்சியட்ைபட்டும் என்றுகூறிய வண்ணம் நீரிடுவர். இந்நாளில் தாய் குளித்துச் சுத்தம் செய்து விட்டு, மணப்பெண்போல், உடையணிந்து -- வந்திருக்கும் உறவினர்களுடன் குடும்பத்துக் கிணற்றிற்குச்சென்று கங்கா பூசை செய்வாள். அதாவது தேங்காய். பழம், அரிசி, வெற் நிலை, பாக்கு, ஆகியவ கிணற்றங்கரையில் வைத்து இறைவனை எண்ணி வண்ங்கிப்பின் தேங்காயை உடைத்து,