பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟莎姆 வெற்றிலை பாக்குடன் கிணற்றினுள் போடவேண்டும். பின்னர், இரு சிறு பாத்திரங்களில் எடுக்கப்பட்ட நீரில் மும் முறை குடித்து விட்டு, அப்பாத்திரம் இரண்டையும் தலை மேல் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, உறவினர் பின் தொடர விட்டிற்குக் செல்வாள். அப்பொழுது அவளுடன் ஒரிரு சுமங்கலிகளும் நீர் சுமந்து வருவார்கள். கொண்டு வரும் நீரை அடுப்படியில் இறக்கி வைத்துவிட்டு, மத்திய அறையிலிருக்கும் விளக்கை வணங்கிவிட்டுக் கூடியிருக்கும் பெரியோர்களிடம் ஆசி பெறுவாள். வந்திருக்கும் அனை வரும் குழந்தையையும், தாயையும் வாழ்த்தித் தன்னால் இயன்ற பொருளைப் பரிசாகக் கொடுப்பர். பின்னர், அங்கு பெருவிருந்து நடைபெறும். ...' 2. கொதி மங்கல் இம்மங்கலம் குழந்தையின் தான்கு அல்லது ஐந்தாவது வயதில் நடைபெறும். இம்மங்கலம் இக்காலத்தில் அதிக மாக இல்லையாயினும் ஒருகாலத்தில் பெரிதும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் மேலுள்ள அன்பு, பாசம் ஆகியவற்றின் காரணமாகத் தம் பெருமைக்கும், பெயருக்கும் ஏற்றாற்போல் இம்மங்கலத்தை நடத்துவர். அன்று விருந்தினர் பலரை வரவழைத்துக் குழந்தையை (பெண் அல்லது ஆண்) திருமணத்திற்கு அலங் காரம் செய்வது போல் அலங்கரித்து, அனைவர் மத்திலும் அமர்த்தித் தாய், கந்தை, பெரியவர்கள் என்னும் முறைப் படி வாழ்த்துவார்கள். குழந்தை பெரியவர்கள் காலைத் தொட்டு வணங்கி ஆசிபெறும். பின்னர் அனைவருக்கும் பெருவிருந்து நடைபெறும். 3. கெமிகுத்தி மங்கல” இது ஆண் குழந்தையின் ஆறு அல்லது ஏழாவது வய தில் நடைபெறும். ஒவ்வொரு கொடவ ஆண்மகனும் பத்தொந்தி கடுக்கு' என்னும் காதணியை அணிய வேண்டும் காதைக் குத்தி இவ்வணியையிடும் நாளை