பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 'கெமிகுத்தி மங்கல' என்று கூறுகிறார்கள். காது குத்தா தார் தம் வாழ்வில் திருமணம் செய்து இல்வாழ்க்கை நடத் தும் உரிமையற்றவர்களாக இருப்பதோடு, எந்தவொரு முக்கிய நாட்களிலும் மற்றவர்களுக்குச் சமமாக அமரும் தகுதியையும் இழந்து விடுகிறார்கள். இவ்வழக்கு இக்காலத் தில் பெரிதும் இல்லையாயினும் சிற்சில இடங்களில் இருப் பதை இன்றும் காணலாம். இம்மங்கலம் ஆண்களுக்கு மட்டுமே உரியதாகையால் பெண்களுக்குக் காது குத்த மாட்டார்களா என்று கேட்க லாம். பெண்களுக்குக் காதுகுத்துவதை மங்கலமாகக் கொண்டாடும் வழக்கம் இல்லை. மங்கலம் நடக்கவேண்டிய, குறித்த நேரத்தில் காது குத்தப்பட வேண்டிய குழந்தையை நல்ல ஆடை அணிவித்து, தோள்களில் இரு சிவந்த துணி களைப் போட்டு அமருவதற்குரிய இருக்கையில் அமர்த்துவர். அன்று வீடு முழுவதும் திருமணச் சடங்கின்போது அலங் கரிக்கப்பட்டிருப்பதுபோல அலங்காரம் செய்யப்பட்டிருக் கும். குழந்தை இருக்கையில் அமர்ந்தவுடன், (குடும்பம் அதன் பெருமை) காதுகுத்துவதின், சிறப்பு ஆகியவையடங்கிய பாட்டைப் பாடகர்கள் மேளதாளங்களுடன் பாடுவார்கள். காதுகுத்த வேண்டிய நேரம் வந்தவுடன், காது குத்தக் கூடிய தட்டார் வந்து, காதைக்குத்தி, தான் செய்து கொண்டு வந்த பத்தொந்திக் கடுக்கனை காதில் பொருத்து வார். அதன் பின், அனைவரும் குழந்தையை வாழ்த்தி பண முடிப்புகளைப் பரிசாகக் கொடுப்பர். காதுகுத்திய தட் டாருக்கு வழக்கப்படி கொடுக்கக்கூடிய பணம், அரிசி, பழம், தேங்காய் அனைத்தும் கொடுக்கப்படும். முடிவில் மங்கலத்தில் கலந்து கொண்ட உறவினர் அனைவருக்கும் பெரு விருந்து அளிப்பார் 4. கரிமங்கல” கொடவர்களின் வீரத்தை எடுத்துக்காட்டும் பெருமைக் குரியதாக அமைந்துள்ளது இந்நரிமங்கலம், ஆணோ பெண் னோ யாராயினும் காட்டின் கொடிய விலங்குகளில் ஒன்