பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. I றாகிய புலியைக்கொல்வாராயின் அவர்களின் வீரத்தைப் பலரறியப் போற்றுவதே இம்மங்கலத்தின் நோக்கம், பெண் களும் இவ்விழாவில் பங்குகொள்கின்றனர். என்பதை நோக்குமிடத்துக் கொடவப் பெண்களின் வீரம் தமக்குப் புலனாகின்றது. பொதுவாக, இம்மங்கலம் நாட்டின் பொதுவிடமாகிய மந்தில்ோ, ஊர் மந்திலோ வைத்து நடைபெறும். அங்குச் சிறு பந்தல் ஒன்றுகட்டி அலங்கரித்து, அதன் முன்னர் இரு தூண்களை நட்டு, அதன்மேல் மேற்கு முகமாகப் புவியைக் கட்டித் தொங்க விடுவார். புவியைக் கொண்டுவர முடிய வில்லையாயின் புலியின் தலையோ, தோலோ, வால் நுனியோ அங்குத் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். புலியைக் கொன்ற வீரர் தம் வீட்டில் குளித்துச் சுத்தம் செய்து, வழக்கமான குப்பியாபோன்ற துணிமணிகளை அணிந்து, முறைப்படி பூசை அறைவிளக்கு, காரொன யாவற்றையும் வணங்கிவிட்டு, உறவினர் புடைசூழ, மேன தாளங்களுடன் ஊர் மந்துநோக்கி ஊர்வலமாக வருவார். வரும்போது அவ் வீரர் துப்பாக்கியை முன்நோக்கி நீட்டிய வண்ணம் பிடித்தபடி வருவார். ஒஜ என்னும் சிவந்த துணியால் துப்பாக்கி மூடப்பட்டிருக்கும். புலி, துப்பாக்கி யால் கொல்லப்படாமல் வேறு கருவியால் கொல்லப்பட் டிருக்குமாயின், அந்த ஒஜ என்னும் சிவந்த துணி அவ் வீரரின் தலையில் கட்டப்பட்டிருக்கும். புலியைக் கொன்ற வர் ஆண்மகனாயின், வழி நெடுகிலும் வெடிமுழக்கங்கள் செய்யப்படும். பெண் வீரராயின் வெடிமுழக்கத்தை நாம் கேட்க முடியாது. மேளதாளங்களுடன் பாட்டை மட்டுமே நம்மால் கேட்க முடியும். அதோடு, துப்பாக்கியை மூடியிருக்கவேண்டிய ஒஜ, அவரின் தலையில் அலங்கரித்துக் கொண்டிருக்கும். இவ்வாறு அழைத்துவரப்பட்ட வீரரைப் புலி தொங்கவிடப் பட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் அமைந்த இருக்கையில், புவியை நோக்கிய வண்ணம் கிழக்கு முகமாக அமர்த்துவர். அவ்வேளையில் பந்தலைச் சுற்றி நாட்டியங்களும், புலி கொன்ற வீரச்செயல் பற்றிய