பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 72 டாட்டும் நடைபெற்றுக்கொண்டிருக்கும். முதன்முதலில் அவ் வீரரின் தாய். வழக்கப்படி புனிதமான அரிசியை அவ் வீரன்மேல் துரவி, இன்று போல் என்றும் உன் வீரம் நிலைபெற்று நிற்பதாக - என்று வாழ்த்திக் குடிப்பதற்குப் பாலும் கொடுத்துப் பொம்பன (Gold coin) என்னும் பண முடிப்பையும் பரிசாகக் கொடுப்பாள். அவ் வேளையில் அந்த வீரமகன் தன் தாயின் காலைத் தொட்டு வணங்கும் காட்சி அனைவருக்கும் பெருமையளிப்பதாக இருக்கும். பின்னர், ஒவ்வொரு உறவினராக வந்து வாழ்த்தித் தனக் கியன்ற பொருளைப் பரிசாக அளிப்பர். இவையாவும் முடித்தவுடன் அனைவரும் ஊர்வலமாக வீரரின் வீட்டை யடைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பெரு விருந்தில் கலந்துகொண்டு மகிழ்வர். 5. இன்னிமங்கல” ஒருவன் ஒருத்தியை முதன்முதலாகத் தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ளும் மங்கல விழாவிற்குக் கன்னிமங்கல என்று பெயர். இதைத் தமிழில் திருமணம் என்றழைக்கிறோம். இத்திருமண நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகள் அடங்கும். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம். மணமகள் தேர்வு: திருமணத்தின் ஆரம்பமாக முதன் முதலில் மணப்பெண் தேர்வும், மணமகன் தேர்வும் மாறி மாறி நடக்கும். மணமகன் வீட்டாரே முதன்முதலாகப் பெண்ணைக் கேட்பதால் மணமகள் தேர்வு எனக்கோடலே ஈண்டு பொருத்தமுடையதாகவுள்ளது. பண்டைக்காலத்தில் பெற்றோர்களே மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்தார் கள். ஆனால் இக்காலத்தில் பெற்றோர்களின் பங்கு குறைந்து பிள்ளைகளின் விருப்பப்படியே பெரும்பான்மைத் திருமணங்களும் நடைபெறுகின்றன. கொடவர்கள் மணப்பெண்ணைத் தெரிந்தெடுப்பதற்கு முன்னர்ச் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்கிறார்