பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 74 மகன் வீட்டார் பெண்ணிற்கென்று கொண்டுவந்த நகையை யும், சாட்சிப் பணத்தையும் கொடுத்தபின் சிற்றுண்டியை முடித்துவிட்டு வீடுதிரும்புவர். இவ்வாறு, வீட்டிற்குத் திரும்பி வருங்கால் வேறு எந்த உறவினர் வீட்டிற்கும் செல்லாமல் நேரே தன்வீட்டிற்கே செல்ல வேண்டு மென்பது நியதியாகும். திருமண நாள் குறித்தது முதல் மணமகனும், மணமகளும் சில கட்டுப்பாடுகளைக் கடைப் பிடித்தல் வேண்டும். குறிப்பாக ஆற்றைக் கடத்தல் கூடாது, விசேட நாள்களில் அணியும் ஆடைகளை அணியக் கூடாது. இறப்புப் போன்ற கெட்ட செய்திகள் தங்கள் வீட்டிற்குவந்து சேரக்கூடாது. இவ்வாறு, கட்டுப்பாடு களுடன் திருமணம் ஆகும்வரை நடந்துவருதல் மிகவும் போற்றிக் காக்கப்படுகின்றது. திருமணத்திற்கு முந்தியநாளைக் கரிக்முரிப்பதினம் அல்லது சப்பர” என்று அழைக்கிறார்கள். அன்று தேரணச் சடங்கு அதாவது மணமகனும் மணமகளும் அவரவர் வீட்டில் திருமணத்தன்று வழக்கப்படி செய்யும் கடன்களை முடித்து வருவதுபோல் வந்து பெரியோர்களிடம் ஆசி பெறுவர். தேரணச்சடங்கு முடிந்ததும் ஊராருக்கு ஐந்து வெற்றிலையும் ஆறுபாக்குகள் வீதம் கொடுக்கவேண்டும். இதை ஊருபத்தி என்றழைப்பர். கொடவர்களின் திருமணச்சடங்குமுறை மற்ற இனத் தவரினின்று மிகவும் மாறுபட்டுக் காணப்படுகிறது. முதன் முதலில் திருனச் சடங்கிற்கு வருவோரை பாளெவிருது கொடுத்து வரவேற்பார்கள். அதாவது விருந்தினர்கள் கொண்டுவருகிற அரிசி, இறைச்சி, பழம் முதலியவற்றைப் பெறுவதற்கு முன்னால்-வருபவர்களை வீட்டின் முன்பக்கத் திலமர்த்தி மூன்று வாழைத்தண்டுகளை நட்டு-வருகின்ற விருந்தினரில் ஒருவரை வெட்டச் செய்வார்கள். இதைமண வீட்டாரால் வருவோர் கெளரவிக்கப்படுவதின் அடையாளமாகச் செய்கின்றனர். அதன் பின்னரே அவர்கள் கொண்டு வரும் கேட்டாமெ (அரிசி-இறைச்சி