பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 『あ பழம்) யைப் பெற்று வீட்டினுள் அழைத்துச் செல்வர். இவ்வாறு, விருந்தினர்கள் அனைவரும் வந்தபின் மன மகனுக்கும் மணமகளுக்கும் தனித்தனியே அவரவர் விட்டில் முகூர்த்தம் நடைபெறும். அதன் பின் தம்பதி முகூர்த்தா என்று அழைக்கப்படும் சடங்கிற்காக இருவரையும் ஊர் வலமாக அழைத்து வருவார்கள். இவ்வாறு, 'தம்பதி முகூர்த்தா விற்காக அமைக்கப்பட்ட பொதுவிடத் தில் (கல்யாண மண்டபம்) திருமணம் நடைபெறும். இவர்களிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. வீட்டின் தலைவர் முதல் அனைவரும் வாழ்த்திச் செல்வதையே திருமணமாகக் கருதுகின்றனர். முடிவில் மணமகன் மன மகளின் கையில் தன் அன்பின் அடையாளமாக ஒரு மோதி ரத்தை அளிப்பான். பின்னர்க் கையைப் பிடித்தபடி அங்கி ருக்கும் குத்துவிளக்கை மும்முறை வலம் வருவார்கள். பின்னர், அனைவருக்கும் பெருவிருந்து அளிக்கப்படும். 6. கூட வளி மங்கல” கொடவர் மறுமண வாழ்க்கையை அனுமதிக்கிறார்கள். கணவனை இழந்த கைம்பெண் மறுமணம் செய்து வாழ் வதைக் கூடாவளி அதாவது திரும்பச் சேர்தல் என்றும், அந்நிகழ்ச்சியை கூடாவளி மங்கல என்றும் அழைக்கிறார் கள். கூடாவளி மங்கலம் மூன்று வகைப்படும். 4. இழந்த கனவனின் உடன் பிறந்தாரை கணத்தல்: இத் திருமண நிகழ்ச்சியில் மணமகன் கன்னிமங்கலத்தில் செய்த அனைத்துக் கலாசார விதிகளையும் செய்ய வேண்டும். ஆனால், மணமகள் அதாவது கைம்பெண் அவ் விதிகள் ஒன்றையும் கடைப்பிடிக்கக்கூடாது. மங்கலத்தின் போது மிக நெருங்கிய உறவினர்களே அழைக்கப்படு வார்கள். தம்பதி முகூர்த்தத்தின் போது மணமகள் தன்னைத்தானே அலங்காரம் செய்துகொண்டு வர வேண்டும். அதன்பிறகு கன்னி மங்கலத்தில் நடந்தது போலவே யாவையும் முடியும்.