பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 76 2. வேறு சூடும்பத்தவரை மணத்தல்: ைக ம் .ெ ப ண் வேறொரு குடும்பத்திலுள்ளவரை மணக்க விரும்பினால் முதன்முதலில் தன் கணவன் வீட்டிலுள்ள உறவுமுறை அனைத்தையும் விட்டுவிட்டுத் தான்பிறந்த வீட்டிற்குச் செல்லவேண்டும். இதைக் கல்லுமரகய்ப்பெ என்று அழைக் கிறார்கள். கல்லுமரகய்ப்பெ நடத்துவதற்காக, விதவை யின் பிறந்தவீட்டு அருவாவும், மறைந்த கணவன் வீட்டு அருவாவும், மற்றும் சிலரும் இறந்த கணவன் வீட்டில் கூடு வார்கள். கைம்பெண் திருமணம் நடக்கும்போது கொண்டு வந்த சாமான்கள் அனைத்தையும் வீட்டின் திண்ணையில் கொண்டு வைப்பார்கள். அச்சாமான்களில் ஒரிரு துணிமணி களை மட்டும் எடுத்துவிட்டுத் திருமணநாள் குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட சாட்சிப் பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். கைம்பெண்ணுக்குக் குழந்தைகள் இருந்தால் அவை அங்கேயே வளரும். கைம்பெண் விட்டுச் செல்கின்ற சாமான்களை அவளது குழந்தைகளுக்காகப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு கல்லுமரகய்ப்பை நடத்திய பின் அக்கைம்பெண் மற்றவரைத் திருமணம் செய்யும் தகுதி பெறுகிறாள். இத்திருமணமும் இழந்த கணவனின் உடன் பிறந்தாரை மணக்கும் நிகழ்ச்சி போலவே நடக்கும். 3. விவாகரத்து செய்யப்பட்டவளை மணத்தல்: ஏதேனும் வருத்தம் காரணமாகக் கணவன் மனைவிக்குள் மணமுறிவு ஏற்பட்டுத் தொடர்பு நெடிதுநாள் விடுபட்டிருந் தால் விவாகரத்து செய்கிறார்கள். முதன்முதலில் பெண்ணின் வீட்டார் கணவன் வீட்டிற்கு வந்து விவாகரத் துச் செய்யும்படி கேட்பார்கள். சம்மதிக்கின்ற கணவன் வீட்டார் கல்லுமரகய்ப்பெ நடத்திப் பெண்ணின் தொடர்பை அறுத்து விடுகிறார்கள். பின்னர், தான் விரும்புகிற யாரை யேனும் மணம்செய்து வாழ உரிமையளிக்கப்படுகிறது. இவ் வாறு நடக்கும் திருமணமும், மேற்கூறப்பட்ட திருமணத் தைப் போல் நடக்கும். இம்மூன்று கூடாவளி மங்கலங்களும் கொடவர் மத்தியில் இன்றும் பழக்கத்திலுள்ளன.