பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五 77 7. ஒக்க பரிஜெ’ ஏதாவது குடும்பத்தில் ஒரெயொரு பெண்ணைத்தவிர மற்ற வாரிசுகள் இல்லாதிருப்பின், அப்பெண் அந்தக் குடும் பத்தின் நிரந்தர வாரிசாக இருக்க வேண்டும். அதற்காகத் திருமணமாகும் பொழுது மணமகன் பெண்வீட்டுக் குடும்பத் தின் உறுப்பினராக மாறவேண்டும். இவ்வாறு, குடும்பத்தின் பெயரை நிலைநிறுத்தும் வண்ணம் நடத்தப்படுகின்ற திரு. மணத்திற்கு ஒக்க பரிஜெ என்று பெயர். ஒக்க என்றால் குடும்பம். மணமகனை மணமகளின் குடும்பத்து உறுப்பினனாக்கு வதற்குச் சம்பந்த கொடுப்பெ நிகழ்ச்சியின் போது இரு வீட்டு அருவாக்களும் பழக்க வழக்கங்களின்படியுள்ள முறை பான சடங்கைச் செய்வார்கள். மணமகள் குடும்பத்திற்கு மணமகன் குடும்பம் மாறிவிட்டான் என்பதற்குச் சாட்சி பாகப் பணம் கொடுக்கப்படும். அதன் பிறகு பெண் வீட்டுக் குடும்பப் பெயருடனேயே மணமகன் அழைக்கப் படுவான். . 8. மக்க பரிஜெ: ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணைத் தவிர மற்ற வாரிசு கள் இல்லாதிருந்தால், திருமணம் செய்தவன் பெண்குடும்ப உறுப்பினனாக மாறாதிருந்தால் மக்கபரிஜெ முறை மேற் கொள்ளப்படுகிறது. அதாவது பெண் அவள் பிறந்த வீட்டி லேயேயிருப்பாள். அவளுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அவள் குடும்பத்தின் பெயராலேயே அழைக்கப்படுவார்கள், தன் கணவன் குடும்பத்தில் இவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. கணவன் தன் வீட்டிற்கு வரும்பொழுது அவனுக்கு வேண்டிய உணவு, உடை போன்ற வசதிகள் கொடுக்க வேண்டும். கணவனுக்கு மனைவியைக் காப்பாற் றும் பொறுப்புக் கிடையாது. இவ்வாறு தன் குழந்தை களைக் குடும்பத்தின் நலனுக்காக மாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் திருமணத்திற்கு மக்க பரிஜெ என்று பெயர். A 623–12