பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 78 9. குட்ட பரிஜெ’ திருமணமாகாத பெண் கள்ளத்தனமாக மற்ற ஆடவ: னின் தொடர்பால் கருத்தரித்தலும் உண்டு. அப்படி ஏற். பட்டால், கருதரிப்பதற்குக் காரணமானவன் அவளை திரு. மணம் செய்ய மறுத்தால் அல்லது குழந்தை பெற்றபின் தாயோ, குழந்தையின் தந்தையோ இறந்தால் அக் குழந்தையை அல்லது அக் கைம்பெண்ணைக் குழந்தைக்கு காரணமாக இருந்தவனின் வீட்டில் சேர்க்கும் உரிம்ை. உண்டு. இதைக் குட்ட பரிஜெ என்றழைக்கிறார்கள். 10. பாளெ மங்கல ஒரு ஆண்மகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிக்ள்: இருந்து அதில் யாரேனும் இறந்து விட்டால், அவர்களின் ஆவி தன்னைப் பின் தொடராவண்ணம் இருப்பதற்கு. பாளெ மங்கலம் நடத்துகிறார்கள். முதலில் வாழைத்தண்டு. ஒன்றை நாட்டி அதை அலங்கரிக்கிறார்கள். இவ் வாழைத். தண்டை இறந்து போன மனைவியின் பிரதிபிம்பமென. எண்ணுகிறார்கள். மணநாளில் மணமகளுக்குச் செய்தது. போல் இவ் வாழைத்தண்டிற்குச் செய்வார்கள். இந் நிகழ்ச்சி இக்காலத்தில் அதிகமாக இல்லையாயினும் ஒரு காலத்தில் மிகவும் பழக்கத்தில் இருந்தது. (பாளெ=வாழை] . பய்த்தாண்டெக்கு அளெப்ப மங்கல” ஒரு பெண் பத்துக் குழந்தைகளைப் பெற்று அப் பத்துக் குழந்தைகளும் உயிரோடிருந்து விட்டால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி கொடவர்களுக்கு வேறு எதுவுமே. யில்லை. பத்துக் குழந்தைகளைப் பெற்ற தாயின் பெயர்ை. யும், பெரும்ையையும் நிலைநாட்டும் பொருட்டு, பய்த் தாண்டெக்கு அளெப்ப மங்கலம் களிக்கிறார்கள். பொது. வாக, பத்தாவது குழந்தை பெற்ற இரண்டு மாதத்தில் இம். மங்கலம் நடைபெறும். கன்னி மங்கலத்தில் நடந்தது. போலவே முகூர்த்தம் அனைத்தும் நடக்கும். முடிவில் வந். திருக்கும் உறவினர் அனைவரும் வாழ்த்திப் பரிசு வழங்கு,