பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 79 வார்கள். அனைவருக்கும் பெருவிருந்து நடைபெறும். இக் காலத்தில் இம் மங்கலம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது . (பய்த்தாண்டெக்கு-பத்து ஆண்டுகளுக்கு, அளெப்பக இருத்தல் திருமணமானபின் ஒரு குழந்தையும் பெறாமல் ஒரு பெண் இறந்து விட்டால் அப் பெண்ணின் விட்டார். தி.கு. மனத்தின்போது கொடுத்த பொருட்களனைத்தும் திரும்பப் பெறுவதற்கு உரிமை பெற்றவர்களாவார்கள். அதுவன்றிப் பெண் தன் கணவனை இழந்து விட்டால் கணவன் வீட்டில் தான் இருக்கவேண்டுமென்ற நியதி கிடையாது; தம் பெற். றோர், வீட்டில் வந்து இருக்கலாம். அப்படி இருக்குங்கால், குடும்பத்தில் எவ்வித உரிமையும் கொடுக்கப்பட மாட்டாது. உணவு, உடை, உறைவிடம் இவற்றிற்கு மட்டுமே அங்கு உரிமை உண்டு. இதைப்போன்று விவாகரத்துச் செய்ன் பட்ட பெண் தம் பெற்றோர் வீட்டில் வந்து இருந்தாலும் உரிமைகள் கொடுக்கப்படமாட்டாது. - ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்யும் உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். தம் முதல் மனைவியை இழந்து விட்ட்ாலோ, அல்லது விவாகரத்து செய்து விட்டாலோ எவ்விதத் தடையுமின்றி இரண்டாம் திருமணம் செய்யலாம். முதல் மனைவிக்குக் குழந்தை யில்லையாயின் அம் மனைவியின் விருப்பத்தின் பேரிலும் மறுமணம் செய்யலாம். இவ்வாறன்றி ஓர் ஆடவர் மது திருமணம் செய்ய முற்படுவாராயின் அச் செய்கைக்குக் குடும்பத்தார்ஒத்துக் கொள்வதில்லை. 12, இறப்பு கொடவர்களின் கொள்கைப்படி, ஒருவர் படுக்கையில் இறந்தாலோ, வீட்டின் உள்ளறையில் உயிர் நீத்தாலோ அதுகுடும்பத்திற்கேகேடு என எண்ணு கின்றனர். அதனால், ஒருவர் இனியின்தக்கமாட்டார் எனத் தோன்றுகின்ற நேரத்