பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தில், வீட்டின் மத்திம அறையில் ஒரு பாயின்மேல் அவரைப் படுக்க வைத்து, பக்கத்தில் ஒரு தேங்காயையும், சிறிது துளசி இலையையும் கரிக்கெ என்னும் புல்லையும், ஒரு தங்க நாணயத்தையும் வைப்பார்கள். உயிர் போய்விடுமோ எனத் தோன்றும் போது அந்தத் தேங்காயை உடைத்து, அதன் நீரைத் துளசி இலையின் மூலமும், கரிக்கெ புல்லின் மூலமும் வாயில் தொட்டுத்தொட்டு வைத்துவிட்டு அந் நாணயத்தை வாயினுள் வைப்பார்கள். இப்பழக்கம் இக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. ஒருவர் இறந்துவிட்டால் அச்செய்தியை மற்றவர் களுக்குத் தெரியப்படுத்துவதற்காக, கிறிஸ்து மதத்தினர் கோவிலில் மணியடிப்பதுபோல, கொடவர்கள் வெடிகள்ை வெடிக்கச் செய்கிறார்கள். வயதானவர் அல்லது திருமண மானவர் இறந்தால் இரண்டு வெடிகளும், குழந்தை அல்லது திருமணமாகாதவர் இறந்து விட்டால் ஒரு வெடியும் விட்டு விட்டு வெடித்துக் கொண்டிருக்கும். வெடிச்சத்தம் கேட்ட வுடன் ஊரில் வீட்டிற்கொருவரேனும் இறந்த வீட்டிற்குச் செல்லவேண்டும். தூரத்து உறவினர்களுக்கு ஆட்கள் மூலம் செய்தியனுப்புவார்கள். இறந்தாரைப் புதைப்பதற்கு முன் னால் பல்வேறு சடங்கு முறைகளிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம். 1. கூளுபெப்பெ: இறந்தவருடைய வீட்டாரும், மற்றும் நெருங்கிய உறவினர்களும் முதன்முதலில் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் ஒரு வெள்ளை வேட்டியும் துண்டும், பெண்கள் சேலையும் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொள்வதை நீருக்கிளிவே என்று அழைக்கிறார்கள். நீருக்கிளித்தவர்கள் இறந்தவர்வீட்டிற்கு வரும்போது வீட்டிலிருந்து செல்லுகின்ற பாதையில் ஒரு வாழையிலையில் சோறும் உடைத்த தேங்காயும் அதன் பக்கத்தில் எரிகின்ற திரியொன்றையும் வைக்க வேண்டும். இதை இவர்கள் கூளுபெப்பெ என்று கூறுகிறார்கள்.