பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 81 இவ் வீட்டிற்கு வருகின்றவாகள் அனைவரும் தம்புறங் கையால் இறந்தவரின் மார்பைத் தொகவேண்டும். இதற்குச் ‘சாவுக்கு கைகொடுப்பெ’ என்று பெயர். அப்பொழுதிலிருந்து இறந்தவரை அடக்கம் செய்யும்வரை நான்கு ஆண்கள் சாவுப் பாட்டுப் பாடிக்கொண்டிருப்பார்கள். முற்காலத் தில் பெண்களும் பாடுவதுண்டு. இரவில் இறந்தவரை அடுத்தநாள்தான் அடக்கம் செய்ய வேண்டுமென்னும் நிலை ஏற்படின், அவ்வுடலின் பக்கத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து, அவ்வீட்டு அருவாவும், மற்றும் சிலரும் துரங்காம லிருப்பார்கள், இதற்குச் சாவு ஒளிவே என்று பெயர். 2. குளிப்பாட்டுதல்: இறந்தாரைக் குளிப்பாட்டுவதற் காக வீட்டின் இடப்பக்கம் ஒரு மறைவிடம் அகைப்பார் கள். இறந்தது ஆணாயின் அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ சவரம் செய்ய வேண்டும். குளிப்பாட்டும் போது மனைவியாயின் கணவனும், கணவனாயின் மனைவி யும், தாத்தாவாயின் பேரனும், குழந்தையாயின் தாயும் முதன் முதலாக நீரூற்ற வேண்டும். அதன்பின் மஞ்சள் பொடியை எண்ணெயில் கலந்து உடல் முழுவதும் தேய்ப் பார்கள். பின்னர், அவர்களது வழக்கமான வெள்ளைநிற ஆடையை அணிவிப்பார்கள். ஆண்களுக்கு ஆடவரும் பெண்களுக்குச் சுமங்கலியும் ஆடை அணிவிக்க வேண்டும். ஆடை அணியும்போது முக்கியமாக, விபூதியைப் பிணத்தில் பூசுவதோடு நெற்றியில் சில நாணயங்களையும் கையில் ஒரு கண்ணாடி (Mirror)யையும் வைக்கிறார்கள். தாங்குவது போன்ற முறையில் அல்லது தரையில் அமர்ந்திருப்பது போன்ற முறையில் ஆடைகளை அணிவித்து ஒரு பாயின் மேல் அல்லது பெஞ்சின்மேல் வைப்பார்கள். பிணத்தின் வரியைச் சிவந்த துணியால் கட்டிவைப்பார்கள். பக்கத்தில் வாசனின்ப்புகை புகைந்து கொண்டிருக்கும். இறந்தவர் வீட்டிற்கு வருகின்ற நெருங்கிய உறவினர் கள்:மேளத்துடனும், புதியவெள்ளைத் துணிகளுடனும், திங்க்ள் துப்பாக்கிகளுடனும் வருவார்கள். இதைக் கொல்