பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 லட்டி என்று அழைக்கிறார்கள். இவ்வாறு வருகின்றவர்கள் வீட்டின் பக்கத்தில் வந்ததும் இரண்டு துப்பாக்கிகள் ஒலி யெழுப்பும். அப்பொழுது அவர்கள் கொண்டுவரும் முரி என்னும் வெள்ளைத்துணியை எடுத்துப் பெண்கள் தங்கள் தலையிலோ, தோளிலோ போட்டுக் கொண்டு மார் பில் அல்லது தலையில் அடித்தபடி அழுவார்கள். இவ்வாறு அழுதட்டி பிணத்தின் பக்கத்தில் வந்ததும் தோளில் கிடக் கின்ற முரியை எடுத்துப் பிணத்தின் பக்கத்தில் வைப் பார்கள். திருமணமானவள் இறந்துவிட்டால் அப்பெண் பிறந்த வீட்டு உறுப்பினர்கள் தேங்காய், அரிசி, மற்றும் சோற் றுடன் இறைச்சி, முட்டை முதலியவற்றையும் கொண்டு வரவேண்டும். அதோடு, கஜ்ஜாய என்னும் பொருள் மூன்றை எண்ணெயில் வறுத்தும் மஞ்சள்கலந்த அரிசியை (மங்கலக்கி)யும் கொண்டுவரவேண்டும். இதைச் சமய என்று அழைக்கிறார்கள். சமயாவை இறந்தவரின் பெற். றோர் கொண்டுவர வேண்டுமென்பது பொது விதியாகும். 3. சாவுச் சடங்கு: பெரும்பாலோர் இறந்தவர் களைப் புதைத்தாலும் சில இடங்களில் எரிக்கவும் செய் கிறார்கள். இறந்தவர் வீட்டு அருவா இச் சடங்கிற்குரிய ஏற்பாடுகளெல்லாம் செய்வார். பிணத்தை அடக்கம் நடத்தும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நாற் காலியையோ, அதற்கெனச் செய்யப்பட்ட அலங்காரத் தேரையோ (பாடை) உபயோகிக்கிறார்கள். தூக்கிச் செல்ல இளைஞர்கள் உதவி செய்வார்கள். அப்பொழுது அவர்கள் தன் தலையிலுள்ள துணியையும், செருப்பையும் அகற்றிவிட வேண்டும். பிணத்தைத் துரக்கியவுடன் வீட்டை மும்முறை சுற்றுவார்கள். அப்பொழுது சிறிது நாணயங்களை மங்கலக்கியுடன் கலந்து வானத்தை நோக்கி வீசுவார்கள். வீட்டிலிருந்து அடக்கம் நடக்கும் இடம்வரை ஊர்வலமாகச் செல்லும்போது வழிநெடுகிலும் நாணயங்