பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 களையும் அரிசியையும் தூவுவார்கள். சமயாவை அகுவா வீட்டுப் பெண்ணொருத்தி எடுத்து வருவாள். சடங்கு நடக்கும் இடத்தை அடைந்ததும் அங்கிருக்கும் குழியை அல்லது சமக்குழியை மும்முறை சுற்றிவிட்டு,தலை தெற்குப்பக்கத்தில் இருக்கும் விதமாக குழியின் கிழக்குப் பக்கத்தில் வைப்பார்கள். சிறிது நாணயங்கள் கட்டப்பட்ட புதிய வெள்ளை ஆடையை வேலைக்காரர்களுக்கு, இறந்தவரின் பரிசாகக் கொடுக்கிறார்கள். அதன்பின் இறந்தவரின் மனைவி அல்லது கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றுமொரு முறை நீர்க்கிளிவார்கள். பின்னர், மனைவி அல்லது கணவன் தன் தலைமேல் நீர் நிரம்பிய மண்குடிக்கையை (குடம்) வைத்துக் கொள்ள வேண்டும். குடத்தின் அடியிலுள்ள துவாரம் வழியாக நீர் பாய்ந்து கொண்டிருக்கும். இறந்தவரின் மூத்தமகன் தன் தலைமேல் ஒரு தேங்காயை வைத்துக் கொள்ள வேண்டும். மருமகன் தன் தலைமேல் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் (செம்பில்) நீர் வைத்துக் கொள்ள வேண்டும். இம் மூவரும் குசா என்னும் புல்லினால் செய்த மோதிரத்தைத் தம் விரல்களில் அணிந்திருப்பார்கள். பின் ஒருவர் பின் ஒருவ ராகப் பிணத்தை மும்முறை சுற்றிவிட்டுக் கணவன் அல்லது மனைவி பிணத்தின் தலைப்பக்கமும், மகன் கால் பக்கமும் மருமகன் இடைப்பக்கமும் நிற்பார்கள். அவர்களுக்கு நிழல் படும்படியாக மேலே வெள்ளைத் துணியைப் பிடிப்பார்கள். இதை மேமடி (தமிழில் பாடிைத் என்றழைக்கிறார்கள். முதலில் மண்குடத்தை வைத்திருப்பவர், அக்குடத்தைப் பிணம் வைக்கப்பட்டிருக்கும் நாற்காலியின் காலில் இரு முறை அடித்து உடைத்து அதை நாற்காலியின் அடியிலிடு வார். இதே போல் தேங்காயையும், செம்புப் பாத்திரத்தை யும் நாற்காலியின் அடியில் இடுவார்கள். இந்நிகழ்ச்சியைக் கொடக்குக்குவெ என்றழைக்கிறார்கள். தமிழர்களின் கொள்ளிவைத்தலுக்கும். இதற்கும் ஒற்றுமை இருப்பது கண்டு நோக்கத்தக்கது.