பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置姆盛 இறந்தது மனைவியாயின் கணவன். ஒரு நாணயத்தை மனைவிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் சேலையின் ஒரு மூலை யில் கட்டி வைக்கவேண்டும். இறந்தது கணவனாயின் மனைவி தன் வளையல்களை உடைத்து விட்டுக் கரிமணி, ஒலை என்னும் காதணி போன்றவற்றை நீக்கிவிட்டு அவற்றைக் கணவனின் கைக்குள் இட வேண்டும். அப் பொழுது விலைமதிப்புள்ள நகைகளை எடுத்து விடுகிறார் கள் அடக்கம் செய்யும் போது துங்குவது போலிருக்கும் பிணத்தை தெற்கு முகமாகவும், உட்கார்ந்திருப்து போலுள்ள்தைக் கிழக்கு முகமாகவும், சுமார் எட்டடி ஆழ முள்ள குழிக்குள் வைப்பார்கள். பின்னர், அப் பின்த்தைச் சுற்றி கடலுப்பைப் போட்டபின் மனைவியோ, கனோ மூன்றுமிடி மண்ணைப் போட்வேண்டும். அதன்பிறகே மற்ற வர்கள் பக்கத்திலிருக்கும் மண்குவியலைக் கவனமாகக் குழிக் குள் தள்ளுவார்கள், நரி, ஓநாய் போன்றவை அக்குழியைத் தோண்ட முடியாத வகையில் மண்ணால் மூடிப் பின், கொண்டுவந்த சமயாவைத் தலைபக்கமாகக் குழியின் மேல் வைத்து இரண்டு வெடிகளை வெடிக்கச் செய்வார்கள். அடக்கம் செய்யுமிடத்திற்கு இறந்தவரின் மனைவி போக வியலாதபடி கர்ப்பிணியாக இருந்தால் தன்நகைகளையெல் லாம் களைந்துவிட்டு, வீட்டிலிருந்த படியே சிறிது நீர் கொடுத்து விடுவாள். அந் நீரைப் பிணத்தின் மேல் தெளிப் ட ரிகள், பிணத்தை எரிப்பார்களேயாயின், மூத்தமகன் முதன் முதலாக ஈமகுண்டத்திற்குத் தீ வைக்க வேண்டும். பிணம் எரிந்து முடியும்வரை வந்திருப்போர் அனைவரும் அங்கேயே நிற்க வேண்டும். இவ்வாறு சவச்ச. ங்கை முடித்துவிட்டு வீடு திரும்புங்கால், கடைசியில் வருகிறவன் பாதையில் முட் களையும்; கற்களையும் இட்டுக்கொண்டு வருவான். இதனால் போனவன் பாதையில் மற்றவன். போகமாட் டான், போகக் கூடாது என்னும் நம்பிக்கையடைகிறார்கள். இச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் குளிக்காமலும், மாற்றுடையணியாமலும் வீட்டிற்குள் போகக்கூடாது. மற்ற