பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

譚粵? அருவா ஒரு சோதிடரைக் கொணர்ந்து, அ வ ரி ன் ஆலோசனைகளின் பேரில், சாத்தன், கூளிக்க போன்ற பிசாசுகளின் தொந்தரவு இருக்காமலிருக்கப் பூசை நடத்து கிறார்கள். சில இடத்திலுள்ளவர்கள் வேறு பல பழக்க வழக்கங்களைக் கையாளுகிறார்கள். ஒருவர் இறந்ததிலி ருந்து மூன்று நாள்கள், துக்க தினத்தைக் கடைப்பிடிக் கிறவர்கள் பக்கத்திலுள்ள குளத்திற்குச் சென்று, மீன் களுக்கு இரையாக அரிசியைத் துவுகிறார்கள். ஏனெனில் இறந்தவர்கள் மீனாக அங்கு இருக்கிறார்கள் என்று நம்பு கிறார்கள். இதை நீர் பெலி என்றழைப்பர். பின்னர், நான் காவது நாள் முதல் ஏழாம் நாள்வரை ஒரு குளக்கரையில் அல்லது ஆற்றின் கரையில் வைத்து மண்பாண்டத்தில் சோறாக்கி, அங்கேயே தரையில் வாழும் பிராணிகளுக்கு இடுகிறார்கள். இதைக் கர்ை பெலி என்றழைக்கிறார்கள். ஏழாவது நாளில் வீட்டின் பக்கத்தில் மூன்று கால்களைக் கொண்ட மேடை ஒன்று ஏற்படுத்துகிறார்கள். இதைப் பெலிமர என்றழைப்பர். இதில் இறந்தவரின் மனைவி அல்லது கணவன் தான் சாப்பிடும் பொழுதெல்லாம் சிறிது சோற்றை வாழையிலையிலெடுத்து அந்தப் பெலிமரத்தில் வைத்து காக்கைகளை உண்ணச் செய்வர். இதைக் காக் கைக்கு கூளுப்புெப்பெ என்றழைப்பர். இவ்வாறு 11 நாள் கள் வரை செய்தபின் மாலையில் கருமாதிச் சடங்கைச் செய்து முடித்துத் தம் துக்கதினத்தை முடித்துக் கொள் கிறார்கள். முடிவில் பொலிச்சிப் பாட்டு என்ற பாட்டைப் பாடுவார்கள். அது, 'இறப்பு யாவருக்கும் பொதுவானது, இறப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை’ எனப் பொருள் பொதிந்ததாக இருக்கும். இதுகாறும் கொடவப் பெருமக்களின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்புவரை நடக்கின்ற வாழ்க்கை முறைகளைக் கண்டோம். பரம்பரை பரம்பரையாக இந்துமதத்தைப் பின்பற்றி வரும் இவர்கள் இன்றுவரை வேறு எம்மதத்தை யும் பின்பற்றாமல் இருந்து வருவதின் மூலமும், இறந்த ஆன்றோர்களை வணங்கும் பழக்கத்தையுடையவர்கள் என்