பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# பிராணி துரபம் காட்டுகிறான். மணி அடிக்கிறான். தெய் யாட்டத்தில் செண்டை மேளம், மற்றும் பலவிதமான வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. அவை எழுப்பும் சத்தத்தில் காது செவிடாகிவிடும் போல் இருக்கிறது. புரி பாடலில் மணி அடித்தலும், கோலெரியில் நறும்புகை காட்டு வதும் விளக்கப்பட்டிருக்கின்றன. தெய்யாட்டம் சடங்கு களில் மனித மண்டையோடு அல்லது யானை ஆகியவை வரையப்பட்ட நீண்ட கொடியேற்றுகிறார்கள். இதைப் போலவே அந் நாளிலும் மண்டை ஒட்டுச் சின்னம் கொண்ட கொடி ஏற்றப்பட்டதாக அறிகிறோம். மலபாரில் நடைபெறும் வேலன் வழிபாடு மற்றும் தெய்யாட்டம் சடங்குகளைச் சங்கப் பாடல்களிலும் பிற் காலப் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் வேல்ன் வழி பாட்டுச் சடங்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மரபு வழிப்பட்ட வேலன் வணக்கம் மலபாரில் தொடர்ந்து நீடிப்பதையும், அதே சமயம், தமிழ்நாட்டில் அது வழக் கொழிந்து போனதையும் காண்கிறோம். தமிழகத்தில் அது ஏன் மறைந்தது என்பது விளங்கவில்லை; ஒரு வேளை ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோற்றிய பக்தி வெள்ளத்தில் தமிழ்நாட்டில் இத்தகைய வேலன் வழிபாடு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆழ்வார்கள் தமது பாசுரங்களில் சிறு தெய்வ வணக்கத்தையும் வேலன் வணக்கத்தையும் அதற்காக நடத்தப்படும் உயிர் பலியையும் கேலி செய்து பரிடியிருக்கிறார்கள். பக்தி இயக்கக் காலத்தில் வேலனையும் முருகனையும் ஒன்றெனக் கொண்ட பொழுது வைதீகச் சடங்குகள் பிரதானமடைந்தன. வேலன் வழி பாட்டை இது பின்னுக்குத் தள்ளி விட்டது. வேலன் வழி பாடும், வைதீகவழி முருக வணக்கமும் ஏக காலத்தில் தமிழகத்தின் பல்வேறு தலங்களில் நடைபெற்றதாகத் திரு முருகாற்றுப்படை காட்டுகிறது. சங்க காலத்தில் முருகனுக்குப் பூசாரியாக இருந்தவன் வேலன். மிகப் பிந்தியக் காலத்தில்தான், வேலன் என்னும் சொல்