பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 தெய்யாட்டம் வள்ளியைக் குறித்தது. அவள் முருகனின் மனைவியாகக் கருதப்பட்டவள். மலபார் வேலன்மார் கர்னாடகத்திலிருந்தும், துளுநாட்டிலிருந்தும் மலபாருக்கு வந்தவர்கள் என்ற கருத்து முக்கியமானது. ஏனெனில், சங்க இலக்கிய மரபுப்படி வேளிர்கள் கொங்கணம் மற்றும் துளு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்ற செய்தியும், இவர்களுடைய வாய்மொழிச் செய்தியும் ஒன்றுபடுகின்றன. இடைக் காலத்தில் கொங்கணம் அல்லாட நாடு என்றழைக்கப்பட்டது. சோமேஸ்வரம் ஹொய்ஸ்ாலர்கள் வசித்த பகுதிகளில் ஒன்றாகும். இந்த ஹொப்ஸ்ாலர்கள் சங்க இலக்கியம் குறிப்பிடும் புலிக்கடி மாலுடன் தொடர்புடையவர்கள். இருங்கோவேள் பண்டைய வேளிர் கொடி வழியைச் சேர்ந்தவன். இவர் களது மூதாதையர்களின் தோற்றம் பற்றிய செய்தியும் ஹொய்சாலர்களின் கதையும் ஒத்திருக்கின்றன. சிந்து வெளி எழுத்துகளில் வேளிரின் பெயரைச் சில அறிஞர்கள் கண் டிருக்கிறார்கள். மலபார் வேலன், வேலனது சந்ததியைச் சேர்ந்தவன் எனக் கூறிக்கொள்கிறான் என்பது தெளிவு. வேளிர் அகத்தியரின் தலைமையில் துவரையிலிருந்து (ஹாரப் பாவிலிருந்து) வந்தார்கள் என்று சில அறிஞர்கள் கருது கிறார்கள். வேலன் என்ற பெயரும், வேளிர் என்ற பெயரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என மு. இராகவை யங்கார் வேளிர் வரலாறு நூலில் கூறியுள்ள கருத்தை ஏற் கெனவே குறிப்பிட்டோம். துளுநாட்டில் உள்ள வேலர்கள் குன்னுர் சாமுண்டியைக் குறிக்கும் ஆட்டங்கள் ஆடுகிறார் கள். வேளிர் தலைவர்கள் வாழ்ந்த இடங்களில் குன்றுார், முதுரர் ஆகியவை பழமை வாய்ந்தவை. வேளிர் குலத்தின் பூசாரிகளாக வேலர்கள் இருந்திருக்கலாம்.தென் கன்னடத் வேலன்மாரில் ஒரு பிரிவினம் கோட்டுக் கோப்பா வன்மார் என்றழைக்கப்படுகிறார்கள் என்று முன்னமேயே குறிப்பிட்டிருந்தோம். கோடு' என்பது கொம்பு. கோப்பு என்றால், கோத்துப் பின்னப்பட்டது என்று பொருள்படும். A 8兹子一多