பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 'கோட்இக் கோப்பு என்பது கொம்புடைய தலையணி என்றாகும். இது வேலன்மார் அணிந்திருக்கும் குல்லாவைக் குறிக்கலாம்.சிந்து சமவெளியில் காணப்பட்ட முத்திரையின் படம் ஒன்று தரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முக்கியமான சில விவரங்களை இப் படம் அளிக்கிறது. கோட்டுக் கோலப்பாலன் எனப்படும் பூசாரி வேலன் அணியும் தலையணிக்கும், சிந்து சமவெளி முத்திரை எண் 2439-இல் காணப்படும் தலைமைப் பூசாரி அணிந்துள்ள தலையணிக்கும் இடையே வியப்பூட்டும் ஒற்றுமை காணப் படுகிறது ஃபின்லாந்து அறிஞர்கள் கூற்றுப்படி, இந்தக் காட்சி ஒரு தெய்வத்திற்கு நடத்தப்படும் சாந்தி விழாவில் நடைபெறும் பனிக்காட்சியாகும்.இம்முத்திரையை ஆராய்ந்த அந்த ஃபின்லாந்து அறிஞர்கள், கொம்புடைய ஆளின் உருவம் வரையப்பட்ட அந்தப் பெரிய கும்பத்தின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருப்பது, அத்தெய்வத்தின் தலைமைப் பூசாரி என்று கருதுகிறார்கள். அப்பூசாரி இரண்டு கொம்பு டைய தலையணியை அணிந்திருக்கிறான். தலையின் உச்சி வில் திரிசூலத்தைத் தரித்திருக்கிறான் தமிழ்மரபுப்படி இது முத்தலைவேல் என்றழைக்கப்படும். இம்முத்தலைவேல் கொண்ட தலையணியிலிருந்து, இப்பூசாரி ஒரு வேலன் தலைமைப் பூசாரி என்றறியலாம். வேலன் இனக்குழுவில் ஒரு உட்பிரிவினரான கோட்டுக்கோப்பாலனைப் போலவே இவனது தலைப்பாகை அமைந்திருக்கிறது. அப்பூசாரிக்குப் பின்னால் ஏதோ ஒரு விலங்கும், முன்னால் கொம்பு டைய ஒர் ஆளின் உருவமும், பெரிய கும்பமும் (ஜாடியும்) செதுக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமின்றிக் கீழே காணப்படும் மூன்று பிரிவுள்ள சதுர வடிவினாலான சின்னமொன்று உள்ளது. - பின்னால் உள்ளது பலிகிடாவாகும். உருவம் வரைந்த கும்பத்தில்தான், பலியிடப்பட்ட ஆட்டின் இரத்தம் உணவு