பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆剑 தானியத்தோடு கலந்து அத்தெய்வத்திற்குப் படைக்கப்படும். கொம்புடைய அத்தெய்வச் சித்திரம் அப்பலியினால் சாந்தி செய்யப்படும் தெய்வத்தைக் குறிக்கும். இத்தெய்வமே அவ்வேலனின் வேட்டலுக்கு இரங்கிக் கும்பத்திலிருந்து வெளியே வந்து அருள் புரியும், சதுரமான சின்னத்தை ஃபின்லாந்து அறிஞர்கள் புனிதச் சடங்கைக் (பிராம்மணச் சடங்கு) குறிப்பது என்று மட்டும் கூறுகிறார்கள். இது அவ் வளவு திருப்தி அளிக்கக்கூடிய விளக்கமாக இல்லை. இச் சதுரம் மூன்று பிரிவுகளைக் கொண்ட களம் என்று கொள்ள வேண்டும். சங்ககாலக் கவிஞர்கள் அறுபத்து நான்கு பிரிவு களைக் கொண்ட களத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பண் டைக் கால வழிபாட்டில் களம் மிக முக்கியம் வாய்ந்தது. கும்பத்தின் ஒரத்தில் காணப்படும் அரச இலை வேலனின் வழிபாட்டில் கடைசிச் சடங்காகிய இரத்த பலியில், இரத் தத்தைத் தெளிக்கப் பயன்படும் தொன்னையைக் குறிக் கிறது எனக்கொள்ளலாம்.மலபார் வேலன்மார் இன்றுகூடச் செக்கி இலையையும் மலரையும் மதச் சடங்குக்குப் புனித மானது என்று கருதுகிறார்கள். இதே போலவே அந்நாளில் அரச இலையைக் கருதியிருக்கலாம். களஞ்சியம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு நேரான குறியீடு, மொகஞ்சோதரா முத்திரைகளில் இவ்வாறு காணப்படுகிறது. : |- o | மெளரியர் காலத்து நாணயங்களில் களஞ்சியத்தைக் குறிக்கும் சித்திரத்தோடு இது ஒத்திருக்கிறது. இதை G.M. பொன்கார்டு லெவின் இந்தியன் ஸ்டடீஸ் பத்திரிகையில் (Wol-10 2-1-60) எழுதியுள்ள கட்டுரையில் தெளிவாக விளக்கியிருக்கிறார். மொகஞ்சோதரா முத்திரையில் களஞ் பெத்தைக் குறிக்கும் குறியீடு மேற்குறிப்பிட்ட களஞ்சியத் தோடு பெரிதும் ஒத்திருக்கிறது. களம்” என்ற சொல்லும் களஞ்சியம் என்ற சொல்லும் ஒசையிலும் பொருளிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவேதான், இரண்