பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

然 {} இக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குறியீடு பயன்படுத்தப் பட்டுள்ளது. தலைமைப் பூசாரியும், கொம்புடைய அத் தெய்வமும் தலையணியிலிருந்து நீண்டுதொங்கும் பாகையை அணிந்திருக்கிறார்கள். அது மலபார் வேலன்மார் அணியும் நீண்ட சிவப்புத் துணியை ஒத்திருக்கிறது. மலபாரில் தெய் பாட்டத்தின்போது தெய்வத்தின் பங்கேற்று ஆடுபவர்கள் அத்தகைய தலைப்பாகையை அணிகிறார்கள். தலையி விருத்து பின்புறமாக முதுகுப் புறத்தில் அத் துணி நீண்டு தொங்குகிறது. முத்திரையில் காணப்படும். சப்தமாதர்கள் எனப்படும் ஏழுபெண்களின் தலையில் காணப்படுவது சிகை பலங்காரத்தை (பின்னலை)க் குறிக்கும் ஆனால்தலைமைப் பூசாரியும், வழிபடப்படும் கொம்புடைய தெய்வமும்அணிந் திருப்பது தலைப்பாகையாகும். பின்னல் என்று கூறுவதற் கில்லை. அவ்வேழு பெண்டிரும் வேளிர் மக்களின் ஏழு பிரி வினரைக் குறிப்பார். ஏனெனில், வேளிர் குலம் தாய்வழிச் சமுதாய அமைப்பைக் கொண்டதாகும். வாதாபியை ஆண்ட சாளுக்கிய மன்னர்கள் சப்த மாதர்களை வணங் கினர். இவர்கள் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள். மஹா சேனன் எனப்படும் கார்த்திகேயன், சப்த மாதர்களின் அடி களில் அமர்ந்து வணங்குவதாகக் காட்டும் சிற்பங்கள் உள்ளன. வேளிர்கள் பற்றிய ஆரம்பக்காலக் கல்வெட்டு களில் அவர்கள் ஸ்வாமி மஹாசேனரையும், சப்த மாதர் களையும் வணங்கியதாகக் குறிப்பிடப்படுகிறார்கள். இவ் வழிபாட்டை அகத்தியர் ஒமத்தி வளர்த்துச் செய்த வைதீக வழிபாடு என்று கூறுவது சரியாகாது. ஏனெனில், புராதன காலத்தில் இரத்தபலி கொடுத்து வழிபடுதலே வழக்கில் இருந்திருக்க வேண்டும். தண்ணிராலும், ஓமத்தி வளர்த்தும் வழிபடும் வழக்கம் பண்பட்டது. பிற்காலத்தைச் சேர்ந்தது. தமிழ் மரபுப்படி வேளிர்குலம் வழிபாட்டுக்குப் பயன்படும் கும்பத்திலிருந்து தடத்திலிருந்து) தோன்றியதாகக் கூறப் படுகிறது. - சிந்துசமவெளி நாகரிகக் கால்த்திலிருந்து பெளத்த மத, இதுமத மரபுகளின் வழியாக இன்றுவரை மதச்சடிங்கு