பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

義 களில் அரசமரம் பெரும் பங்கு வகிக்கிறது, சிந்து நாகரிகக் காலத்திலிருந்து அரசமர்ம் அர்சனுக்கும் மதச் சட்ங்குகளுக் கும் உரிய சின்னமாக வழங்கி வந்திருக்கிறது. பாண்டியர் களின் ஆரம்பக் கால நாணயங்களில் அரசனுக்குரிய சின்ன மாக அரசமரம் காணப்படுகிறது.சதுரவடிவத்திலும் நீண்ட சதுர வடிவத்திலும் காணப்படும் இந்தச்செப்பு நாணயங்கள் அமைப்பில் சாதவாகனர்களின் நாணயத்தை ஒத்திருக்கின் றன. இவற்றை கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையேயுள்ள காலத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ளலாம். இந்த நாணயங்களில் வேலியினுள் போதிவிருட்சம் காணப்படுகிறது.இதுபெளத்த மதச்.சின்னமாகக் கொள்ளப்பட்டது.ஆனால்,அரசமரத்தை அரசனுக்குரிய சின்னமாகக் கொள்ளுவதே சரியாகும். அரசன் என்ற சொல் மன்னனைக் குறிப்பதாகும். இது அரையன் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். இச்சொல் வேளிர் குல மன்னர்களது பரம்பரைப் பெயராகக் குறிப் பிடப்படுகிறது. இதன் வேர்ச் சொல் அரை' என்பதாகும், இது தமிழில் அரச மரத்தையே குறிக்கிறது. அரசன் என்ற சொல்லே அவன் அரசமரத்தைச் சின்னமாகக் கொண்ட திலிருந்து தோன்றியதாகும். இருங்கோவேளின் முன்னோ னாகிய மிகப் பண்டைய வேளிர் தலைவன் அரையம்" என்ற நகரையே தனது தலைநகராகக் கொண்டிருந்தான். பேரரையம், சிற்றரையம் என இரு பகுதிகளாக அது இருந்ததெனக் கருதப்பட்டது. பெரும் செல்வவளம் படைத் திருந்த பண்டை நகரமாகிய அரையம், கழாத் தலையார் என்ற புலவரின் சாபத்தினால் அழிந்துபட்டது. (புறம் 202; அரையம் என்ற சொல்லும் அரை' என்ற அரச மரத்தி. லிருந்து பிறந்ததாகும். பண்டைய வேளிருக்கு அரசமரம் எவ்வளவு முக்கியம்வாய்ந்தது என்டிதை இது காட்டுகிறது: இரு பகுதிகளாக அரையம்,பிரிக்கப்பட்டிருந்த செய்தி. மிக முக்கியமானது, ஏனெனில் மொகஞ்சோதரா, ஹாரப்பா, காளிபங்கன் ஆகிய இடங்களில் நகர அமைப்பு இரு பிரிவு களாக நிர்மாணிக்கப்ப்ட்டுள்ளது. இதனோடு ஒப்பிட்டுப்