பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பார்க்க வேண்டியதாகும். அரண்மனை அரசவை போன்ற கட்டடங்களையுடைய ஒரு பகுதியையும், பெரும்பான்மை மக்களின் வாழிடங்களைக் கொண்ட பிறிதொரு பகுதியை பும் கொண்டதாக இந்த முற்கால இந்திய நகரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அரசமரம், அரசர்கள் மற்றும் தலைமைப் பூசாரிகளின் சின்னமாக இருந்திருக்கலாம்.சிந்து நாகரிகத்தின்இக்குறியீட்டிலிருந்துதான், பெளத்தமதத்தின் அரசமர வணக்கம் தோன்றியிருக்க வேண்டும். கடம்பர்கள், யாதவர்கள், சாளுக்கியர்கள் மற்றும் சில பரம்பரையினர் வேளிர் குலத்திலிருந்து தோன்றியவர்கள் என்து மு. இராகவையங்கார் கருதினார். நாம் குறிப்பிட் டுள்ள முத்திரையில் காணப்படும் காட்சி, முருகனை வேளிர் குலத் தலைமைப் பூசாரி வழிபடுவதைச் சித்திரிப்பதாகக் கொள்ளலாம். கடம்பர் போன்றவர்களால் இம் முருகன் மஹாசேனன் என்ற பெயரால் வணங்கப்பட்டான்.முருகன், சேய், அருமீன் கடத்தாளன் போன்ற பெயர்கள் அடிக்கடி காணப்படுவதை ஃபின்னிஷ் மற்றும் சோவியத் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழில் முருகன் என்பது எதிரி களை அழிப்பவன் எனப் பொருள்படும். இளமை, அழகு போன்றவற்றோடு இப் பெயரைத் தொடர்புபடுத்துவது பிற்கால வழக்காகும், கும்பத்தில் வரையப்பட்டிருக்கும் தெய்வம் முருகனாகவே இருத்தல் வேண்டும். இத் தெய்வம் வ்ேலன் வழங்கும் பலியை ஏற்றுக் கொள்ளுகி9ಣ வேலன் முருகனைத் தன்னுள்ளே ஆவியேற்கும் பொழுது Ga667 முருகனாகவே மாறிவிடுகிறான். எனவே முருகன், வேலன் ஆகிய இரு பெயர்களும் ஒரே பெயரையுடையனவாக மாறி விட்டன. அதனால்தான், சிந்து முத்திரையில் வழிபடும்