பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2考 இக்கட்டுரையில் ஆசிரியர், மானிடவியல், சமுதாய வியல், நாட்டுப் பண்பாட்டியல் முதலிய துற்ைகளின் செய்திகளையும் வரலாற்று ரீதியாக பகவதி வழி பாட்டின் கூறுகளை ஆராய்கிறார். ஆய்வுமுறை பல Gisop · @5D6ABILI 4. (Interdisciplinary integrated method) வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியைக் strg89jib qpampu$3'fth 2-6ireitgi. (Historical development) --பதிப்பாசிரியர்.1 கேரளத்தில் பகவதியை வழிபடும் வழக்கம் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றது. கிராம மக்களிடையே பகவதி மிகச் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படு கிறாள். வடமலபாரில் பகவதி கோவில் இல்லாத கிராமமே இல்லையென்று கூறலாம். மலையாள பகவதி' என்ற வழக்குத் தமிழகத்தில் வழங்குகின்றதையும் காணலாம். இந்தப் பகவதி வழிபாடு கண்ணகியை வழிபட்டதிலிருந்து தோன்றியது என்ற கருத்துத் தமிழ்நாட்டிலும் கேரளத் திலும் சில அறிஞர்களிடையே உள்ளது. ஆனால், இக் கருத்துக்குச் சான்றான கதைகள், நம்பிக்கைகள், நேரிடை யாக மலையாள கிராம மக்களின் பகவதி வழிபாட்டில் கானோம். கண்ணகியின் கதை தனியாக மலையாள் நாட்டுப் பாடல்களில் வழங்குகின்றது. ஆனாலும், பகவதி வழிபாட்டில் கண்ணகி வழிபாடு இரண்டறக் கலந்துள்ளது என்பதற்குச் சில இடங்களில் மறைமுகமான, உறுதியான சான்றுகள் இருக்கின்றன. பகவதியின் வழிபாட்டில் தாய் வழிபாடு (Mother worship) கொற்றவை, காளி வழிபாடு, சக்தி வழிபாடு, நாக வழிபாடு, மாரியம்மன் வழிபாடு, சைனர்களின் பத்மாவதி தேவதை வழிபாடு, புத்தர்களின் தாராதேவி வழிபாடு ஆகிய வழிபாடுகளின் கலப்பையும் காண்கிறோம். சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி காளியாகக் கருதப்பட்டதைக் காண்கிறோம். பாலைத்தெய்வமான கொற்றவையும் காளியும் இணைக்கப்பட்டதைச் சங்க காலத்திற்குப் பின்னரும் காண்கிறோம். நாடு செழிப்பாவ