பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱é தற்குக் கண்ணகியைத் தமிழ்நாட்டு மன்னர்களும் இலங்கை மன்னன் கயபாகுவும் வழிபட்டதையும் உரைபெறு கட்டுரை கூறுகின்றது. வெப்பு நோயும் குருவும் போகக் கண்ணகியை வழிபட்டதும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் கண்ணகியைச் சக்தி தேவதையென்று கருதிய எண்ணமும் மாரியம்மன் போன்று அம்மை நோயைத் தடுக்கக் கூடியவள். தரக் கூடியவள் என்ற கருத்தும் சிலப்பதிகாரக் காலத்திலேயே இருந்தது என்பது தெரிகின்றது. கண்ணகி வழிபாட்டி விருந்து பகவதி வழிபாடு தோன்றியபோது அதனுடன் சேர்ந்த சக்தி வழிபாடு (செழிப்புத் தெய்வம்), காளி வழிபாடு ஆகியனவும் பகவதி வழிபாட்டில் சேர்ந்தன. ஆனால் நாக வழிபாடு, பத்மாவதி தேவதை வழிபாடு, தாரா தேவி வழிபாடுகள் பிற்காலத்தில் கண்ணகி வழி பாட்டுடனோ, பகவதி வழிபாட்டுடனோ கலந்திருக்கலாம். அவ்விதமாகக் கலந்ததற்குத் தமிழ்நாட்டு இலக்கியங் களிலும் சிற்பக்கலையிலும் சான்றுகள் தென்படவில்லை. கேரளத்தில் இந்த மாற்றம் சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின் தோன்றி இருக்கலாம். வடமலையாள நாட்டில் பகவதி வழிபாட்டைக் கிராமங்களில் உள்ள கோயில் வழிபாடுகளை ஆராய்ந்ததி விருந்து தெரிந்து கொண்டேன். மற்றும் கிராமங்களில் பகவதியின் கோலங்கொண்டு ஆடும் தெய்வ ஆட்டங்களை (folk dances) ஆராய்ந்து பார்த்ததிலிருந்தும் பகவதி வழி பாட்டைப் புரிந்து கொண்டேன். இந்தக் கட்டுரையில் முதலில் இரு பகவதிக் கோயில்களில் பகவதி வழிபாட்டு முறைகள் விளக்கப்பட்டு முடிவுகள் கூறப்படும். வட மலையாள நாட்டில் முக்கியமானதொரு பகவதிக் கோயில் கொயிலாண்டி என்ற ஊரில் உள்ள விஷாரி காவு கோயி லாகும். கொயிலாண்டி பந்தலாயினிக் கொல்லம் என்றும் அழைக்கப்படும். இந்த ஊர் கள்ளிக்கோட்டையிலிருந்து முப்பது மைல் தொலைவில் வடக்காக உள்ளது. இந்த விஷாரி காவு கோயில் தோன்றியதைப் பற்றி ஒரு கதை வழங்குகின்றது. தெற்கேயிருக்கின்ற கொல்லத்திலிருந்து